Perunjeeragam Water Benefits
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்றைய நிலையில் சத்தான உணவுகள் என்ற பேசிக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் துரித உணவுகளும், சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் வேலைக்கு செல்லும் நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவை மருந்தாக உண்டு நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை உண்டு பல நோய்களை வரவழைக்கின்றோம். தெளிவாக சொல்லப்போனால் “உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு” என்ற காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். சரி அதை விடுங்க இது அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். நம்மை நாம் தான் பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும். சத்தான காய்கறிகள், பழங்கள், சத்தான உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்று வெயில் காலத்தில் சோம்பு தண்ணீர் குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பெருஞ்சீரகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் |
பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் பெருஞ்சீரகத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மேலும் பெருஞ்சீரகம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்று சொல்லப்படுகிறது. இதில் குறைந்த கலோரிகள் மற்றும் பல்வேறு மைக்ரோ மற்றும் மேக்ரோ நியூட்ரியண்ட்கள் அதிகமாக இருக்கின்றன.
மேலும் பெருஞ்சீரகத்தில் வைட்டமின் C, வைட்டமின் E, வைட்டமின் K,
தாதுக்கள், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், செலினியம் மற்றும் இரும்பு, பாலிஃபீனால் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, அனெத்தோல் போன்ற கரிம சேர்மங்கள் இருக்கின்றன.
சோம்பை உணவில் சேர்ப்பதற்கு முன் அதனின் தீமைகளை தெரிந்து கொள்ளவும் |
இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது என்று தெரியுமா..? அதை பற்றி இங்கு காண்போம்.
- வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறது
- செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது
- ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.
- சரும நோய்கள் வராமல் தடுக்கிறது.
- இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
- புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
- கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
- எடை இழப்பிற்கு உதவுகிறது.
- வாயுவைக் குறைக்க உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |