அளவுக்கு அதிகமாக கவலைப்படுவதால் உண்டாகும் நோய்கள் என்ன..?

Advertisement

Stress Related Diseases in Tamil

இனிமையான நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் கவலைப்படுவதால் நம் உடலில் ஏற்படும் நோய்கள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். கவலை என்பது இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் ஏற்பட கூடிய ஓன்று. கவலையே இல்லாதவர்கள் என்று நாம் யாரையும் கூற முடியாது.

சொல்லப்போனால் பல பேருக்கு கவலை என்பது மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. கவலை வந்தாலே போதும் அதனுடன் பல வியாதிகளும் வந்து விடுகிறது. அதுபோல கவலைப்படுவதால் நம் உடலில் என்னென்ன நோய்கள் உருவாகிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா.?

மனஅழுத்தம் உண்டாக்கும் நோய்கள்:

கவலைப்படுவதால் உண்டாகும் நோய்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் வாழ்க்கையை பற்றி ஒவ்வொரு விதமான கவலைகள் இருக்கும். அந்த கவலைகள் எல்லாம் சில நாட்களில் மனம் சார்ந்த நோய்கள் மற்றும் உடல் சார்ந்த நோய்களையும் ஏற்படுத்துகிறது. அப்படி கவலைப்படுவதால் நம் உடலில் என்னென்ன நோய்கள் உண்டாகிறது என்று பார்ப்போம்.

இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள்: 

இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள்

கவலைப்படுவதால் உடலில் Cortisol என்று சொல்ல கூடிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனை உண்டாக்குகிறது. இந்த Cortisol என்ற ஹார்மோன் சுரப்பதால் சீரற்ற இதயத்துடிப்பு, இதயம் பலவீனமாதல், அதிக இரத்த அழுத்தம், இதயவாழ்வு சுருக்கம் மற்றும் இதய அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தோல் சம்மந்தப்பட்ட நோய்கள்:

தோல் சம்மந்தப்பட்ட நோய்கள்

பொதுவாக “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்று சொல்வார்கள். அதுபோல, நாம் அதிகமாக கவலைப்படும் போது அது சருமம் சார்ந்த நோய்களை ஏற்படுத்துகிறது.

அதேபோல, கவலைப்படும் போது உடலில் உண்டாகும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு, அது தோல்களில் இரத்த ஓட்டம் செல்வதை தடுக்கிறது. இதன் காரணமாக சருமத்தில் சுருக்கம், கண்களில் கருவளையம் ஏற்படுதல் மற்றும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகளை ஏற்படுகிறது.

செரிமான கோளாறுகள்:

செரிமான கோளாறுகள்

கவலைப்படும் போது செரிமானம் சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் நெஞ்செரிச்சல், வயிறு உப்புதல் மற்றும் தொடர்ச்சியான ஏப்பம், வயிறு இரைச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

தூக்கமின்மை: 

தூக்கமின்மை

அதிக மனக்கவலை ஏற்படும் போது அது தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பகலில் நம் மனதில் ஏற்படகூடிய பலவிதமான சிந்தனைகள் இரவில் நினைவுகளாக தோன்றி தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமில்லாமல், இது அதிகப்படியான தலைவலியை ஏற்படுத்துகிறது. அதுபோல கவலைப்படுவது மூளையில் உள்ள நரம்புகளை பாதித்து நியாபக மறதி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்..?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement