டிபி நோய் அறிகுறிகள்
மாறி வரும் பருவநிலை மற்றும் உணவு முறைகளால் பல நோய்கள் பரவி வருகிறது. அந்த வகையில் காசநோய் முக்கியமானதாக உள்ளது. இந்த நோய் மைக்ரோ பாக்டீரியம் டியுபர் குளோசிஸ் என்ற வைரஸ் மூலம் தொற்றக்கூடிய நோயாகும். இதனை ஆங்கிலத்தில் Tuberculosis (TB) என அழைக்கப்படுகிறது. இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி பரவி வருகிறது. காச நோய் எப்படி பரவுகிறது, காச நோய் வந்தால் அதற்கான அறிகுறிகள் என்ன என்பதையெல்லாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
டிபி நோய் எதனால் வருகிறது?
இது மைக்ரோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் என்ற வைரஸ் மூலம் உருவாகிறது.
காசநோய் பரவும் முறை:
காச நோய் உள்ள நபரிடமிருந்து வெளிப்படும் மூச்சு காற்றின் மூலம் மற்றொருவருக்கு பரவுகிறது. இது காற்றின் மூலம் பரவக்கூடிய நோயாகும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
டீபி நோய் யாருக்கெல்லாம் வரும் :
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு காச நோய், HIV, எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு, கிட்னி நோய் உள்ளவர்களுக்கு, புற்றுநோய் உள்ளவர்களுக்கு, சத்து குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காசநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
- புகைப்பிடித்தல், மது அருந்துவதால் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
காச நோய் அறிகுறிகள்:
- தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு தீராத இருமல். மேலும் இருமும் போது ரத்தத்துடன் சில திரவங்கள் வெளிவருவது போன்றவை இருந்தால் அது காசநோய் அறிகுறியாகும்.
- உமிழ் நீரை வெளியிடும் போது திரவங்களுடன் நாற்றம் வெளிப்பட்டால் அது பாக்டீரியல் நோய் அல்லது எச்சில் நீர் போன்று வெளிப்பட்டால் அது வைரல் நோயாகும். இதைத்தவிர ரத்தம் கலந்து வெளிப்பட்டால் அது காசநோய்.
Symptoms Of Tb in Tamil – நெஞ்சுவலி:
- டிபி உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது இருமும் போது வலி ஏற்பட்டாலோ, நெஞ்சுவலி, நெஞ்சின் மேல் வைத்து அழுத்தும் போது வலி ஏற்பட்டாலோ அது Tb-யின் அறிகுறியாகும்.
உடல் எடை குறைதல் – டிபி நோய் அறிகுறிகள்:
- சாதாரணமாக இருக்கும் உடல் எடையை விட கணிசமாக எவ்வித உழைப்பு இன்றி உடல் எடை குறைதல் மற்றும் பசியின்மை போன்றவை காசநோய்க்கான அறிகுறி.
உடல் நடுக்கம் – Symptoms Of Tb in Tamil:
- அதிக காய்ச்சல், உடல் நடுக்கம் மற்றும் இரவில் அதிக வியர்வை காசநோய்க்கான அறிகுறி. காய்ச்சல் வருவதற்கான காரணம் டிபி வைரஸ் உடலில் இனப்பெருக்கம் செய்வதை தடுப்பதற்காக உடலின் வெப்ப நிலையை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது.
டிபி நோயின் அறிகுறிகள்:
- Latent Tuberculosis Infection இந்த நோய் உடலில் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் இருக்காது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைந்தவுடன் அறிகுறிகள் வெளிப்படும். இது காச நோயில் இரண்டாவது வகையாகும்.
- பல்மோனரி காசநோய்: இந்த நோய் நுரையீரலை பாதிக்காமல் மற்ற பகுதிகளை பாதிக்கிறது.
- இந்த நோயிற்கான அறிகுறிகள் பாதிப்பு அடைந்த பகுதி வீக்கமடைதல் (நிணநீர்ச்சுரப்பிக் கணுக்கள் – லிம்ஸ்ப்நோட்ஸில் காசநோய்), அதிக தலைவலி, நரம்பியல் பிரச்சனை (டி.பி. மெனிஞ்ஜைடிஸ்), உடல் பலம் இழந்து காணப்படுதல் (முதுகெலும்பு கூர்முனை-ஸ்பைனில் காசநோய்) ஆகும்.
- இந்த நோயில் இருமல் வராது ஏனெனில் இது நுரையீரலை பாதிப்பதில்லை.
- மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களில் நீடித்தால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
காச நோய் பரிசோதனை:
- சளி பரிசோதனை
- மார்பக எக்ஸ்ரே பரிசோதனை
- மாண்டோ (Mantoux) பரிசோதனை
காசநோய் உணவு முறைகள் |
சர்க்கரை நோய் அறிகுறிகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |