திரிபலா சூரணம் பயன்கள் | Thiripala Suranam Benefits in Tamil

Advertisement

திரிபலா சூரணத்தின் பயன்கள் | Thiripala Suranam Uses in Tamil

பெரும்பாலும் மக்களுக்கு நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை தான். அதுவும் இப்பொழுது ஜங்க் புட் உணவு மக்களிடம் அதிக அளவு பிரபலமாகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இது போன்ற உணவுகளை எடுத்து கொள்வதால் வயிற்று வலி, வாயு தொல்லை, உடல் சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. இவற்றை குணப்படுத்துவதற்கு திரிபலா சூரணம் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. இந்த சூரணம் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகளை தருகின்றன என்பதை படித்தறியலாம் வாங்க.

திரிபலா சூரணம் என்றால் என்ன?

  • திரிபலா என்பதில் உள்ள திரி என்பதற்கு மூன்று என்று பொருள். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் மூன்றும் ஒன்றாக சேர்ந்தது தான் திரிபலா சூரணம். இது இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.
  • இதில் இருக்கும் தான்றிக்காய் உடலை சுத்தம் செய்வதற்கும், நெல்லிக்காய் நீண்ட நாள் வாழ்வதற்கான ஆயுளையும், கடுக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும்.

புற்றுநோய்:

Thiripala Suranam Uses in Tamil

  • திரிபலா சூரணத்தில் இருக்கும் ஆன்டிபயாடிக் பண்புகள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
  • உடலுக்குள் கிருமிகள் நுழையாமல் பார்த்து கொள்ள உதவுகிறது.

செரிமானத்திற்கு:

திரிபலா சூரணம் பயன்கள்

  • திரிபலா சூரணம் பயன்கள்: நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்கவில்லை எனில் உடலில் பல விதமான உபாதைகளை ஏற்படுத்த ஆரம்பித்து விடும்.
  • செரிமான பிரச்சனை இருக்கும் போது திரிபலா சூரணம் சாப்பிட்டு வருவதால் அது குடல் மற்றும் உணவுப்பாதை இயக்கத்தை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.

இரத்தத்தின் இயக்கத்திற்கு:

திரிபலா சூரணம் பயன்கள்

  • உடலில் எப்பொழுதும் இரத்தத்தின் அளவு சீராக இருப்பது அவசியம். அப்போது தான் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • உடம்பில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இரத்தத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும் இந்த திரிபலா சூரணம் உதவியாக இருக்கிறது.
ஒரு துண்டு நெல்லிக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன நன்மை கிடைக்க போகிறது?

சர்க்கரை நோய்:

Thiripala Suranam in Tamil

உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் பலருக்கும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடிவதில்லை. இந்த பிரச்சனையை சரி செய்வதர்களு மருத்துவரை நாடி தான் செல்கிறார்கள். அவர்கள் மாத்திரை, மருந்துகளை தான் எழுதி தருகிறார்கள். இவற்றை எடுத்து கொள்ளாமல் இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க கீழே உள்ள முறையை பின்பற்றுங்க..

சர்க்கரை நோய் உள்ளவர்கள் 1 டம்ளர் நீரில் ஐந்து கிராம் திரிபலா சூரணம் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடலில் இன்சுலின் அளவை சமநிலையில் வைத்து சர்க்கரை நோயிலிருந்து விடுபட உதவுகிறது.

எடை குறைய:

Thiripala Suranam in Tamil

  • இன்றைய சூழலில் மக்கள் பெரும்பாலும் சந்திக்க கூடிய பிரச்சனை என்றால் அது உடல் எடை அதிகமாக இருப்பது தான். இந்த பிரச்சனை ஆனது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கிறார்கள். இதனை சரி செய்வதற்கு பல மருந்துகளை நாடி செல்கிறார்கள். அவர்களுக்கு அருமருந்தாக இந்த திரிபலா சூரணம் இருக்கிறது.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெந்நீரில் 1 டேபிள் ஸ்பூன் திரிபலா சூரணம் கலந்து தினமும் காலையில் குடித்து வரலாம். இதை குடித்தவுடன் அரை மணி நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள கூடாது.

திரிபலா சூரணம் தயாரிக்கும் முறை:

திரிபலா சூரணம்

  • நெல்லிக்காய் – தேவையான அளவு
  • தான்றிக்காய் – தேவையான அளவு
  • கடுக்காய் – தேவையான அளவு

செய்முறை:

  • நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் தேவையான அளவு எடுத்து நிழலில் காயவைத்து கொள்ளவும்.
  • நெல்லிக்காய் மற்றும் கடுக்காயில் உள்ள விதையை நீக்கி விடவும். மூன்றும் நன்றாக காய்ந்த பிறகு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இது தான் திரிபலா சூரணம் தயாரிக்கும் முறையாக இருக்கிறது. என்னால் செய்ய முடியாது என்றால் நட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
பெண்களை பாதுகாக்கும் கழற்சிக்காய்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement