இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

sleeping tips in tamil

ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் | Home Remedies for Sleep in Tamil

Thookam Vara Tips – பொதுவாக ஒருவருக்கு நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் அவர்களுடைய வேலைகளை சரியாக பார்க்க முடியும். அத்தகைய உறக்கம் நமக்கு சரியாக இல்லையென்றால் நம்மளுடைய அடுத்தநாள் வேலைகளை சரியாக பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே ஓரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நல்ல தூக்கம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இந்த தூக்கத்தின் அளவானது வயதைபொறுத்து மாறுபடும். அதாவது பிறந்த குழந்தையாக இருந்தால் அவர்கள் கொஞ்சம் வளரும் வரை 10 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை நன்றாக உறங்கலாம். அதன் பிறகு குழந்தை கொஞ்சம் விளையாட ஆரம்பித்த பிறகு தூக்கத்தின் அளவானது குறைய ஆரம்பித்து விடும். அவர்களுக்கு விளையாடும் நேரமானது கொஞ்சம் அதிகரித்து விடும் ஆனால் அப்பொழுதும் குழந்தைகள் 10 மணிநேரம் வரை நன்றாக உறங்கலாம். அதன் பிறகு குழந்தை பள்ளிக்கு செல்வது, கல்லூரிக்கு செல்வது, வேலைக்கு செல்வது என வளர வளர அவர்களுடைய தூங்கும் நேரமானது குறைய ஆரம்பித்து விடும்.

இப்போதெல்லாம் பலரும் சொல்லும் ஒரு விஷயமா தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆண்களாக இருந்தாலும் சரி.. பெண்களாக இருந்தாலும் சரி.. எதிர்காலத்தை நினைத்தும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நினைத்தும் மனதை போட்டு வருத்தி கொள்வதினால் தான் இந்த தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகின்றது. இது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் கூட இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு இன்னொரு காரணங்களும் இருக்கிறது. அதாவது நமது உடலில் பலவகையான ஹார்மோன்கள் சுரக்கின்றது, அவற்றில் ஒன்று தான் மெலடோன், இந்த ஹார்மோன் நமக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இது இரவு நேரத்தில் மட்டுமே சுரக்கக்கூடிய ஒரு ஹார்மோன் ஆகும். குறிப்பாக இருட்டில் மட்டுமே அதிகளவு நமது உடலில் இந்த ஹார்மோன் சுரக்கப்படுகிறது. ஆகவே நாம் உறங்கும் இடமானது நன்கு இருண்ட அறையாக இருக்க வேண்டும். சரி இந்த பதிவில் இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? | Sleeping Tips in Tamil Language

sleeping

சாப்பிடும் நேரம்:

Thookam Vara Tips 1 – நீங்கள் இரவில் தூங்க செல்லும் நேரத்திற்கும், உணவருந்தும் நேரத்திற்கும் இடைவெளியானது குறைந்து 2 முதல் 3 மணி நேரமாவது இருக்க வேண்டும். இந்த விஷயத்தை உங்களால் பின்பற்ற முடியவில்லை என்றாலும் குறைந்தது 1 மணி நேரமாவது இடைவெளி இருக்கலாம். ஒரு மணி நேரம் கூட இடைவெளி விடமுடியாத அளவிற்கு பிசியாக இருப்பவர்கள் அட்லீஸ்ட் அதிகம் இரவில் சாப்பிடுவதை தவிர்த்து குறைந்த அளவிலேயே சாப்பிடுங்கள் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இரவில் தவிர்க்க வேண்டிய செயல்கள்:

Thookam Vara Tips 2 – சிலர் உறங்கும் நேரத்தில் கூட மொபைல் நோண்டுவது, TV பார்ப்பது, லேப்டாப் பார்ப்பது போன்ற செயல்களை செய்வதினால் இரவில் சரியாக உறங்க நேரம் இல்லாமல் போய்விடும் ஆகவே இத்தகைய செயல்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

குளியல்:

Thookam Vara Tips 3 – ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தால் நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. ஆகவே நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு கொஞ்சம் நேரத்திற்கு முன் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். இதன் மூலம் உடல் நன்கு புத்துணர்ச்சி அடையும் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வர வழிவகுக்கும். இருப்பினும் உங்களுடைய ஆரோக்கியத்தை பொறுத்து இரவில் குளிப்பதை மேற்கொள்ளுங்கள்.

இசை:

Thookam Vara Tips 4 – இரவில் உறங்க செல்லும் போது உங்களுக்கு மிகவும் பிடித்த இசைகளை கேட்கலாம். ஆனால் பார்க்கக்கூடாது. உங்களுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்கலாம். இதனால் உங்கள் மனம் அமைதியாகும். உங்கள் மனதில் ஏதேனும் அழுத்தம் இருந்தாலும் இசையை கேட்கும் போது மனம் ரிலாக்ஸ் ஆகும். இதன் மூலம் மனமும் புத்துணர்ச்சி ஆகும் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வர வழிவகுக்கும்.

ஒரு நிமிடத்தில் ஆழந்த தூக்கம் வர வேண்டுமா ? – சூப்பர் IDEA..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips