உடலில் உள்ள வலிகளை போக்குவதற்கான பாட்டி வைத்தியம்
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தகவலை பற்றித்தான். அது என்னவென்றால் நமது உடலில் ஏற்படும் மூட்டுவலி, கை வலி, கால் வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் ஒரே ஒரு தீர்வாக இருக்கும் வகையில் ஓர் பாட்டி வைத்தியம் பற்றித் தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உடலில் உள்ள அனைத்து வலிகளை போக்குவதற்கான தீர்வு:
இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது உடலில் ஏற்படும் வலிகள் தான். அதனால் அதனை எப்படி போக்குவது என்று நாமும் பல வழிகளை கையாண்டிருப்போம்.
ஆனால் அவையாவும் உங்களுக்கு நல்ல தீர்வை அளிக்காமல் கைவிட்டிருந்தால் பரவாயில்லை இந்த பதிவில் கூறியுள்ள குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் வலிகள் குறைந்து நிரந்தரமாக நீங்குவதை நீங்களே காணலாம்.
இந்த பாட்டி வைத்தியத்திற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- மலைக்கற்றாழை – 1 துண்டு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- ராகிமாவு – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் நாம் நாம் எடுத்து வைத்திருந்த மலைக்கற்றாழையை எடுத்து அதில் உள்ள முட்களை நீக்கி அதனை நிழலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனின் மீது சிறிதளவு நல்லெண்ணெய் தடவி பின்னர் அதனை அடுப்பில் காட்டி நன்கு வாட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு அதனின் நடுப்பகுதியை சிறிய சிறிய கோடுகளாக கீறி கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு பிழிந்து அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் நாம் பிழிந்து வைத்திருந்த சாறை ஊற்றி அதனுடன் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ராகிமாவு சேர்த்து நன்கு ஒரு பசைப்போல செய்து கொள்ளுங்கள் பிறகு அதனை நமது உடலில் எங்கு வலி இருக்கிறதோ அங்கெல்லாம் தடவி கொள்ளுங்கள்.
இந்த பசையை தொடர்ந்து தடவி வந்தால் உங்களின் உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்குவதை நீங்களே காணலாம்.
முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |