வைட்டமின் d பழங்கள் மற்றும் காய்கறிகள் | Vitamin d Fruits and Vegetables in Tamil
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் வைட்டமின் டி உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னென்ன அதனால் என்ன நன்மைகள் என்பதையும் பார்ப்போம். நம் உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் எலும்பு பிரச்சனை வருவது வைட்டமின் டி குறைவாக இருப்பதால் தான் வருகிறது.
நாம் பழங்கள், காய்கறிகள் எல்லாமே சாப்பிடுகிறோம் ஆனால் அதில் என்ன சத்துக்கள் இருக்கிறது அதனால் என்ன பயன் என்றெல்லாம் நினைத்து உண்ணுகிறோமா.! இல்லை நீங்கள் அப்படி சத்தான உணவுகளை தேடி சாப்பிட்டால் ஏன்.? எலும்பு பிரச்சனை வருகிறது. வாழ்வதற்காக உணவுகளை உண்ண கூடாது. ஆரோக்கியமாக வாழ்வதற்கு என்ன உணவுகள் இருக்கிறது அதை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமாக வாழ்வதற்காக வைட்டமின் டி உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
வைட்டமின் ஏ உணவு வகைகள் |
Vitamin d Fruits in Tamil:
நாம் பழங்களை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் தினமும் ஒரே பழத்தை சாப்பிடுவதனால் என்ன நன்மை இருக்கும். தினமும் ஒவ்வொரு வகையான வைட்டமின்களை உடலில் சேர்க்க வேண்டும். அழகாகவும், ருசியாகவும் உள்ள பழங்கள் ஆரோக்கியத்தை தராது. நாம் சாப்பிடும் போது ருசியை கண்டு சாப்பிட கூடாது. ஆரோக்கியத்திற்காக தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் வைட்டமின் டி உள்ள பழங்களின் நன்மைகளை காண்போம்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு – Vitamin d Orange Juice in Tamil
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி அதிகம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மற்றும் சருமத்தை பொலிவு அடைய செய்கிறது. அதுமட்டுமில்லாமல் இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது.மலச்சிக்கல் நீங்க வாழைப்பழம்:
முக்கனியில் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சனை இருக்காது என்பது அனைவரும் அறிந்தது. நம் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதயத்திற்கு சரியான அளவில் இரத்த சென்று வர வாழைப்பழம் உதவுகிறது. இதய நோய் பிரச்சனை வராமல் இருப்பதற்கு வாழைப்பழம் தினமும் உண்ணலாம்.
வைட்டமின் d உள்ள காய்கறிகள் – Vitamin d Vegetables in Tamil
நாம் காய்கறிகள் எல்லாமே சாப்பிடுவோம் ஆனால் அந்த காய்கறிகளை நாம் குழம்பு வைத்து சாப்பிடுவோம் இல்லையென்றால் வறுவல், பொரியல், கூட்டு போன்றவை செய்து சாப்பிடுவோம். அப்படி செய்து சாப்பிடுவதில் இந்த குழம்பிற்கு இதை சைடிஷ் வைத்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று தான் யோசிப்போம். எந்தெந்த காய்கறிகளில் என்ன சத்துக்கள், வைட்டமின்கள் இருக்கிறது என்று பார்த்து சாப்பிடமாட்டோம். இந்த பதிவை படித்த பிறகாவது தினமும் சத்தான மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். நம் உடலுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதே போல் ஆரோக்கியமும் முக்கியமானது நண்பர்களே. ஆரோக்கியத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவும் வகையில் வைட்டமின் டி உள்ள காய்கறிகளை பார்ப்போம்.
எலும்பு வலிமை பெற காளான்:
காளானில் வைட்டமின் சி, பி, டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெற முடியும். அதுமட்டுமில்லாமல் புற்று நோய் வராமலும் தடுக்கிறது. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் காளானை வாரத்தில் மூன்று தடவை எடுத்து கொள்வது நல்லது.
வைட்டமின் டி உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |