இனிமே தர்பூசணி விதைகளை தூக்கி எறியாதீர்கள்! அதன் நன்மையை அறிந்து கொள்ளுங்கள்..! Watermelon Seeds Benefits in Tamil
பொதுவாக கோடை காலம் வந்துவிட்டது என்றாலே போதும் தெருவுக்கு தெரு தர்பூசணி கடை முளைத்து கூட்டம் கலைக்கட்டிவிடும். 92 சதவீதம் வரை நீர்ச்சத்தை கொண்டுள்ள இந்த தர்பூசணி பழத்திற்கு தண்ணீர் பழம் என்றொரு பெயரும் உண்டு. தர்பூசணியின் பலன்களை பற்றி அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில். தர்பூசணியில் உள்ள விதையில் ஒளிந்திருக்கும் மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
தர்பூசணி விதை பலன்கள் – Watermelon Seeds Benefits in Tamil:
கலோரிகள் குறைவாக உள்ள இந்த தர்பூசணி விதைகள் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது.
இந்த தர்பூசணி விதையில் ஜிங்க், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய நீர்ச்சத்துக்களை கொண்டுள்ளது. ஆக இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆக தர்பூசணி விதைகளை வெயிலில் உலர்த்தி வருது பொடி செய்து சாப்பிடலாம். அதேபோல் தர்பூசணி விதைகளை பர்பி அல்லது வெல்லம் கலந்த உருடைகளாக பிடித்தும் சாப்பிடலாம்.
தர்பூசணி விதைகள் பொதுவான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சரும நலனில் அக்கறை செலுத்துகிறது.
இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் இந்த விதைகள் நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
ஆண்மை குறைவுக்கு தீர்வாக அமையும் தர்ப்பூசணி விதைகள், உடல் சோர்வுடன் எதிர்த்து போராடுவதோடு புரோஸ்டேட் புற்றுநோயை தாக்கும் பாதிப்புகளை குறைகிறது.
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள தர்பூசணி விதைகள் ஆஸ்துமா மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்க சிறப்பாக உதவுகிறது.
தர்பூசணி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்வதால் தலைமுடி வளர்ச்சி வெகுவாக அதிகரிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தண்ணீரை வைத்து இப்படியெல்லாம் கூட உடல் எடையை குறைக்கலாமா..? தெரிலைனா தெரிஞ்சுக்கோங்க..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |