Which Vegetables Are Highest Sugar in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் எந்தெந்த காய்கறிகளில் சர்க்கரை இருக்கிறது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகள் எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதனால் சர்க்கரை நோயாளிகள் அந்த காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் சர்க்கரை நிறைந்த காய்கறிகள் எது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!
வைட்டமின் டி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் |
சர்க்கரை நிறைந்த காய்கறிகள்:
பீட்ரூட்:
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஓன்று தான் பீட்ரூட். இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இருந்தாலும் இதில் சர்க்கரை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? பீட்ரூட்டில் 8% சர்க்கரை நிறைந்துள்ளது.
வெங்காயம்:
வெங்காயம் ஜலதோஷம், தும்மல் மற்றும் நீர்க்கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வெங்காயத்தில் 4.7% வரை சர்க்கரை நிறைந்துள்ளது.
பச்சை பட்டாணி:
பச்சை பட்டாணி இதயத்தையும் நுரையீரலையும் பாதுகாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. பச்சைப் பட்டாணி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இந்த பச்சை பட்டாணியில் 5.9% வரை சர்க்கரை காணப்படுகிறது.
கேரட்:
கேரட்டில் கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் காணப்படுகின்றன. கேரட்டில் இருக்கும் சத்துக்கள் கண்கள், சருமம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இதில் 4.7% வரை சர்க்கரை உள்ளது.
தக்காளி:
தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தக்காளியில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளையும் பற்களையும் வலிமையாக வைக்க உதவுகிறது. தக்காளியில் 2.5% வரை சர்க்கரை நிறைந்துள்ளது.
குடை மிளகாய்:
இதில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியவை குறைவாக இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது புற ஊதாக் கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம் மற்றும் வறட்சியை போக்க உதவுகிறது. குடை மிளகாயில் 4.4% வரை சர்க்கரை காணப்படுகிறது.
முட்டைகோஸ்:
முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதனால் இது உடலை தாக்கும் புற்றுநோய் மற்றும் இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. முட்டைகோஸில் 3.8% வரை சர்க்கரை உள்ளது.
பீன்ஸ்:
பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. பீன்ஸில் 3.6% சர்க்கரை காணப்படுகிறது.
இதையும் பாருங்கள்–> நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |