நீங்கள் குடிக்கும் தண்ணீரில் எந்த தண்ணீர் நல்லது என்று தெரியுமா.?

Advertisement

தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் அத்திவாசியமான ஒன்றாகும். மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் எந்த தண்ணீரை வேண்டுமானாலும் குடிக்கும். ஆனால் மனிதன் குடிப்பது இரண்டு தண்ணீர் தான். ஒன்று குழாய் தண்ணீர், மற்றொன்று கேன் தண்ணீர். இந்த இரண்டில் அதிகமாக பயன்படுத்துவது கேன் தண்ணீர் தான். நீங்கள் குடிக்கும் தண்ணீரில் எந்த தண்ணீரை குடித்தால் உடலுக்கு ஏற்றது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:

மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

மனிதன் ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் வரைக்கும் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த அளவு உடல் அமைப்பை பொறுத்து மாறுபடும்.

இதையும் படியுங்கள் ⇒ வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

எந்த தண்ணீரை குடிக்க வேண்டும்:

மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

நம் முன்னோர்கள் காலத்தில் மண் பானையில் வைத்து தண்ணீரை குடித்தார்கள். இப்பொழுது அப்படியில்லை  சுத்திகரிப்பட்ட தண்ணீரை தான் அதிகம் குடித்து வருகின்றனர். இந்த சுத்திகரிப்பட்ட தண்ணீர் பாக்டிரியாக்களை அழித்து விடுகிறது. ஆனால் தண்ணீரில் உள்ள சத்துக்களையும் சேர்த்து அழித்து விடுகிறது. 

மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

குழாய் தண்ணீரை சுத்திகரித்து குடிக்க மாட்டோம். ஆனால் குழாய் தண்ணீரில் வரும் பைப் மற்றும் டேங்க் சுத்தம் செய்ய மாட்டார்கள். அதனால் குழாய் தண்ணீரில் கண்ணுக்கு தெரியாத பாக்ட்ரியாக்கள் நிறைய இருக்கும். 

 தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கிறது. இந்த தண்ணீரை குடிக்கும் பொழுது புற்றுநோய் மற்றும் ஹார்மோன் பிரச்சனை ஏற்படும். தண்ணீர் குடிப்பதில் இவ்வளவு இருக்கா என்று யோசிப்பீர்கள்.! இப்போ என்ன தண்ணீரை தான் குடிப்பது என்று தானே கேட்கிறீர்கள்.!

 தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

 நீங்கள் எந்த தண்ணீரை குடித்தாலும் கொதிக்க வைத்து வடிகட்டி குடியுங்கள். இல்லை என்னால் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க முடியாது என்றால் செப்பு குடத்தில் தண்ணீரை வைத்து குடியுங்கள்.  

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:   

  1. சிறுநீரகம் நன்றாக செயல்படும்.
  2. இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும்.
  3. மலசிக்கல் பிரச்சனை ஏற்படாது.
  4. உடலின் வெப்ப நிலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்.
  5. மயக்கம் மற்றும் பதற்ற நிலை ஏற்படாது.

தண்ணீரை எப்போது குடிக்க கூடாது.?

 தண்ணீரை சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் தண்ணீரை குடிக்க கூடாது. இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். 

இதையும் படியுங்கள் ⇒ அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement