குழந்தைகள் முன் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..!

Parenting Tips in Tamil

குழந்தைகள் முன் செய்யக்கூடாதவை | Parenting Tips in Tamil

Good Parenting Tips in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்பு எந்த மாதிரியான விஷயங்களை செய்ய கூடாது என்று தெரிந்துக்கொள்ளுவோம். குழந்தைகளை சிறிய வயதிலிருந்து நல்ல விதமாக வளர்ப்பது பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. குழந்தைதானே என அவர்கள் முன் நீங்கள் செய்யும் சிறிய தவறுகள், குழந்தை தவறு செய்வதற்கு  ஆரம்பமாகலாம். குழந்தைகள் முன்பு நின்று தீய சொற்கள் பேசுவது, மற்றவர்களிடம் சண்டை இடுவது போன்ற பல காரியத்தினை செய்யாமல் இருந்தால் அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது உறுதி. சரி அந்த வகையில் குழந்தைகளுக்கு முன்பு எது மாதிரியான காரியங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

குழந்தைகளை பராமரிக்க உதவும் அடிப்படை டிப்ஸ் !!!

தவிர்க்க வேண்டியவை:

Parenting Tips in Tamil

 • குழந்தைகள் அனைவருமே நிறைய தவறுகள் செய்வது வழக்கம். பெற்றோர்கள் ஆகிய நாம்தான் குழந்தை செய்யும் தவறினை மாற்ற வேண்டும். குழந்தை செய்யும் தவறினை கண்டிக்காமல் விடக்கூடாது.
 • குழந்தையின் முன்பு நின்று பெற்றோர்கள் சண்டை போடுவதை தவிர்த்துக்கொள்ளவும்.
 • parenting tips in tamil: பெரியவர்களை குழந்தைகள் அடிக்கும் போது திருத்த வேண்டும். குழந்தையை திருத்தாவிட்டால் பெரியவர்கள் ஆனதும் திருத்தவே முடியாமல் போகும்.
 • குழந்தையை பெற்றோர்கள் மிரட்டும் போது கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன் போன்ற சொற்களை உபயோகப்படுத்தி குழந்தையை திட்டாதீர்கள்.
 • தங்கள் குழந்தைக்கு முன்பு வேறு ஒரு குழந்தையை ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்கவும். அதுபோல், மற்றொரு குழந்தையை ஒப்பிட்டு தன் குழந்தையை தாழ்த்தி மற்றவர்களிடம் பேச கூடாது.
 • ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ தெரிந்த நபரிடமோ அதிகம் பழக்கமில்லாத நபரிடமோ செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தால்  கட்டாயப்படுத்தி குழந்தையை அவர்களிடம் விடாதீர்கள்.
 • குழந்தை முன்பு தீய சொற்கள் பேசுவதை தவிர்க்கவும். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
 • குழந்தைகள் எதிலும் தோல்வியை சந்தித்தால் அவர்களை திட்டவோ, அடிக்கவோ செய்யாதீர்கள்.
 • குழந்தைகளை யாருடனும் சேராதே வீட்டிலே இரு என்று அவர்களை அடைத்து வைக்காதீர்கள்.
 • குழந்தையினை எப்போதும் படி படி என்று தொந்தரவு செய்யாதீர்கள்.
 • parenting tips in tamil: குழந்தை மிகவும் அடம் பிடிக்கிறது என்று அவர்கள் கேட்டும் அனைத்து பொருளையும் வாங்கி கொடுக்காதீர்கள்.
 • குழந்தையின் முன்பு தாய், தந்தையர் பாலியல் ரீதியான சீண்டல்களை செய்யக்கூடாது.
 • குழந்தைகளை எப்போதும் தனிமையில் இருக்க விடக்கூடாது.
 • குழந்தையின் முன்பு அப்பாக்கள் புகை பிடிப்பது, மது அருந்துதல் போன்றவைகளை செய்ய கூடாது.
 • குழந்தைகள் முன்பு மற்றவர்களை புறம் பேசுதல் கூடாது.
 • குழந்தை முன்பு நின்று தாய், தந்தையர் உடைகளை மாற்ற கூடாது.
 • மதத்தினை பற்றி குழந்தைகளுக்கு கற்றுத்தர கூடாது.
 • ஆண், பெண் குழந்தைகள் என பிரித்து பார்க்காமல் சரி சமம் என்று சொல்லி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
 • குழந்தைகளை எப்போதும் தனியாக விடாமல் பெரியவர்களின் பார்வையில் இருக்கும்படி வைக்கவும்.
 • அனவைருக்கும் முன்னிலையில் குழந்தைக்கு உடை மாற்றுவதை தவிர்த்து தனி அறைக்கு அழைத்து சென்று உடையை மாற்றி விடவேண்டும்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்