தோசை மாவு இல்லாமல் சுவையான பிரெட் தோசை செய்வது எப்படி?

Advertisement

Bread Recipe in Tamil:

ஹாய் நண்பர்களே..! இன்று நம்முடைய பொதுநலம். காம் பதிவில் தோசை மாவு இல்லாமல் பிரெட் தோசை செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம். தோசை பிரியர்களுக்கு இந்த பதிவு பயனுள்ள ஒன்றாக இருக்கும். ரவை தோசை, வெங்காய தோசை, பொடி தோசை, முட்டை தோசை இதுபோன்ற தோசை தான் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் பிரெட் தோசை சாப்பிடாதவர்களுக்கு இன்று சுவையான பிரெட் தோசை செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டு உங்கள் வீட்டிலும் அனைவர்க்கும் பிடிக்கும் வகையில் செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

இட்லி தோசை மாவு இல்லாத நேரத்தில் 10 நிமிடத்தில் இந்த மொறு மொறு தோசை ட்ரை பண்ணுங்க..!

பிரெட் தோசை செய்ய தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டு -5

கோதுமை மாவு – 3 தேக்கரண்டி

ரவை – 3 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

தயிர் – 3 தேக்கரண்டி

வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 2

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப்-1

முதலில் நாம் எடுத்து கொண்ட பிரெட் துண்டுகளை சிறிய துண்டுகளாக நறுக்கி அதன் பிறகு மிக்சி-யில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அரைத்த பிரெட் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

ஸ்டேப்-2

அரைத்து வைத்த பிரெட் மாவில் ரவை மற்றும் கோதுமை மாவு இரண்டு மாவுகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

ஸ்டேப்-3

அதன் பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், துருவிய கேரட் , மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு இவை அனைத்தையும் மாவு கலந்து வைத்துள்ள பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து கலந்துகொள்ளவும்.

ஸ்டேப்-4

மாவு கலந்து வைத்துள்ள பாத்திரத்தில் தோசை ஊற்றுவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பக்குவம் வரும் வரை கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்-5

bread recepi in tamil

மாவு தயார் ஆனா பிறகு அடுப்பு பற்ற வைத்து அதில் தோசைக்கல் சூடேறியவுடன் தயார் செய்த தோசை மாவினை தோசை கல்லில் விரிவாக ஊற்றாமல் அடைபோல் ஊற்றவேண்டும். நமக்கு தேவையான அளவு தோசையில் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். இனி சுவையான பொன் முறுவலான பிரெட் தோசை ரெடி.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement