கத்திரிக்காய் தட்டப்பயறு குழம்பு
ஹாய் நண்பர்களே..! கத்தரிக்காயில் நீங்கள் நிறைய வகையான சாப்பாடு சாப்பிட்டு அலுத்துப்போயிருப்பீர்கள். அவர்களுக்கும் சமைக்கும் தாய் மார்களுக்கும் இந்த கத்தரிக்காய் தட்டப்பயறு குழம்பு பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நாவிற்கு சுவை தரும் கத்தரிக்காய் தட்டைப்பயறு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டு பயன்பெறவதற்கு இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ சுட்ட கத்திரிக்காய் குழம்பு ருசியாக செய்யலாம் வாங்க..!
கத்தரிக்காய் தட்டைப்பயறு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- தட்டப்பயறு- 200 கிராம்
- மிளகு- 1 தேக்கரண்டி
- சீரகம்- 1 தேக்கரண்டி
- வெந்தயம்- 1/4 தேக்கரண்டி
- துருவிய தேங்காய்- 3 தேக்கரண்டி
- மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
- தன்யா தூள்- 2 தேக்கரண்டி
- நறுக்கிய தக்காளி- 1
- கத்தரிக்காய்- 200 கிராம்
- புளி- சிறிதளவு
- சின்ன வெங்காயம்- 15
- பூண்டு- 6 பல்
- இஞ்சி- சிறிய துண்டு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
கத்தரிக்காய் தட்டப்பயறு குழம்பு செய்முறை விளக்கம்:
ஸ்டேப்- 1
முதலில் தட்டப்பயறு 200 கிராம் எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைக்க வேண்டும். தட்டபயறு ஊறிய பிறகு அதனை நன்றாக அலசி விட்டு ஒரு குக்கரில் தட்டப்பயறை கொட்டி அதனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அதன் பின் குக்கரை வழக்கம் போல் மூடி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். 3 அல்லது 4 விசில் வரும் வரை தட்டப்பயறு வேக வேண்டும். தட்டபயறு வெந்த பிறகு ஒரு தனி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஸ்டேப்- 2
அடுத்தாக இந்த குழம்பு வைப்பதற்கு ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். மசாலா தயார் செய்வதற்க்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்துள்ள சீரகம், மிளகு, வெந்தயம் இந்த மூன்றையும் முதலில் பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப்- 3
அடுத்ததாக வதக்கிய பொருட்கள் இருக்கும் அதே பாத்திரத்தில் சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், பூண்டு பல், கொத்தமல்லி, மிளகாய் தூள், தன்யா தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எல்லாம் சேர்ந்து நன்றாக வதங்கிய பிறகு ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து மசாலாவை தனியாக வைக்க வேண்டும்.
ஸ்டேப்- 4
மசாலா அரைத்து முடித்தவுடன் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, தக்காளி, சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, சிறிதளவு உப்பு இவை அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதக்கி முடித்தவுடன் கத்தரிக்காய் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வதக்க வேண்டும்.
ஸ்டேப்- 5
5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேக வைத்துள்ள தட்டபயறு இரண்டையும் சேர்த்து அதில் சிறிதளவு புளி தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு பாத்திரத்தை மூடிவிடவும். 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான கத்தரிக்காய் தட்டப்பயறு குழம்பு தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |