1 கப் ரவை இருந்தால் போதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ருசியான ஸ்வீட் ரெடி..!

Advertisement

ரவை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி..? 

வணக்கம் இனிமையான நேயர்களே… இன்றைய நம் பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஸ்வீட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த ஸ்வீட் செய்வதற்கு ஒரு கப் ரவை இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம்.

ஸ்கூல் விட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதுபோன்ற ஸ்வீட் செய்து கொடுக்கலாம். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நண்பர்களே ரவை வைத்து அருமையான பால் ரவா பர்பி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ கோதுமை மில்க் கேக் செய்வது எப்படி

பால் ரவா பர்பி தேவையான பொருட்கள்:

  1. ரவை – 1 கப்
  2. நெய் – தேவையான அளவு
  3. பால் – 3 கப்
  4. சர்க்கரை – 1 கப்
  5. குங்கும பூ- சிறிதளவு
  6. ஏலக்காய் தூள் – தேவையான அளவு

பால் ரவா பர்பி செய்முறை:

ஸ்டெப்: 1

முதலில் ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் ரவை சேர்த்து 3 நிமிடம் வரை நன்கு வறுக்க வேண்டும்.

ஸ்டெப்: 2

பின் அதில் 2 கப் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ரவை பாலுடன் நன்கு கலந்த பின்னர் மீதமுள்ள ஒரு கப் பால் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப்: 3

பிறகு ரவை பாலுடன் நன்கு கலந்த உடன் அதில் சிறிதளவு குங்கும பூ சேர்த்து கொள்ள வேண்டும். குங்கும பூ இல்லையென்றால் சிறிதளவு நிறத்திற்காக மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்.

ஸ்டெப்: 4

பின்னர் பாலும் ரவையும் நன்கு வெந்தவுடன் அதில் அரை கப் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்து நன்கு கலந்த பின் அதில் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப்: 5

நன்றாக கலந்த பின் அதில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். நெய் சேர்த்து கொள்வதால் அடிபிடிக்காமல் இருக்கும்.

ஸ்டெப்: 6

பின் அது நன்கு திரிந்து வரும் வரை கிண்ட வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிண்ட வேண்டும்.

ஸ்டெப்: 7

பின் ஒரு தட்டில் நெய் தடவி வைத்து கொள்ள வேண்டும். அதில் இதை சேர்த்து நமக்கு பிடித்த வடிவத்தில் இதை கேக் போல கட் செய்து சாப்பிடலாம்.

அவ்வளவு தான்… அனைவருக்கும் பிடித்த பால் ரவா பர்பி தயார்..! 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement