தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி?

Advertisement

தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி | Thakkali Illamal Chutney Seivathu Eppadi

இட்லி, தோசை என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய காலை மற்றும் இரவு உணவு. அனைத்து வீட்டு இல்லத்தரசிகளுக்கும் சட்னி செய்வது தான் மிகப்பெரிய வேலையாக இருக்கும். அதுவும் இப்பொழுது தக்காளி விலை அதிகமாக உள்ளது. தக்காளி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் அனைவரும் தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி என்று தான் யோசிப்பீர்கள். அப்படி யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் இந்த பதிவில் தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம், வாங்க எப்படி சட்னி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தக்காளி இல்லாமல் சட்னி அரைப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. நல்லெண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  2. பூண்டு – பத்து 10 பல்
  3. சிகப்பு மிளகாய் (வரமிளகாய்) – தேவையான அளவு
  4. புளி – சிறிதளவு
  5. வெங்காயம் – பத்து
  6. மிளகாய் தூள் – சிறிதளவு

செய்முறை – ஸ்டேப்: 1

முதலில் ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும். பின் எண்ணெய் சூடான பிறகு பத்து பூண்டை தோல் நீக்கி அந்த கடாயில் போட்டு வதக்கி கொள்ளவும்.

Thakkali Illamal Chutney Seivathu Eppadi Tamil – ஸ்டேப்: 2

  • பின் பூண்டு வதங்கிய பிறகு தேவையான அளவு காய்ந்த சிகப்பு மிளகாய் மற்றும் சிறிதளவு புளி சேர்த்து கொள்ளவும்.

ஸ்டேப்: 3 – தக்காளி இல்லாமல் சட்னி அரைப்பது எப்படி?

  • பூண்டு, மிளகாய், புளி கொஞ்சம் வதங்கிய பிறகு பத்து சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

தக்காளி இல்லாமல் வெங்காய சட்னி – ஸ்டேப்: 4

  • பின் வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி ஆகியவை நன்றாக வதங்கிய பின் 10 நிமிடம் ஆற வைத்து பின்னர் மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது சுவையான தக்காளி இல்லாத கார சட்னி தயார்.
தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி
தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement