தூதுவளை ரசம் செய்வது எப்படி..?
அன்பான நெஞ்சம் கொண்ட பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் தூதுவளை ரசம் செய்வது எப்படி என்பதை பற்றித்தான். பொதுவாக மழைக்காலங்களில் நம்மில் பலருக்கும் சளி, இருமல் தொல்லை அதிக அளவில் இருக்கும் அப்பொழுது இந்த தூதுவளை ரசம் செய்து சாப்பிட்டால் சளி தொல்லைகளில் இருந்து விடுபடலாம். இந்த தூதுவளையை குழந்தைகள் சாப்பிட விரும்பமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு இந்த தூதுவளையை ரசம் போல செய்து கொடுங்கள் அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க தூதுவளை ரசம் செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி
தேவையான பொருட்கள் :
- தூதுவளை இலை – 1 கைப்பிடி
- புளி – எலுமிச்சை அளவிற்கு
- சின்னவெங்காயம் – 6 பொடியாக நறுக்கியது
- மிளகு -2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பூண்டுப்பற்கள் – 10
- கடுகு – 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
- துவரம்பருப்பு -1 டீஸ்பூன்
- தக்காளி -2
- காய்ந்தமிளகாய் – 3
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை – தேவையான அளவு
- கருவேப்பிலை – தேவையான அளவு
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- உப்பு – 1 டீஸ்பூன்
தூதுவளை ரசம் செய்முறை :
ஸ்டேப் – 1:
முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்திருந்த எலுமிச்சை அளவிலான புளியை தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 2 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 10 பூண்டுப்பற்கள், 1 டீஸ்பூன் துவரம்பருப்பு மற்றும் 1 கைப்பிடி அளவிலான தூதுவளை இலை போன்றவற்றை சேர்த்து நன்கு மசியவிடாமல் ஒன்றும் இரண்டுமாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் – 2:
பிறகு நாம் ஊறவைத்திருந்த புளியை நன்கு கரைத்த பின்னர் அதிலிருந்து புளித்தண்ணீரை மட்டும் பிரித்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் அந்த புளித்தண்ணீருடன் நாம் எடுத்துவைத்திருந்த 2 தக்காளியை நன்கு கரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3:
அடுத்து அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதனுடன் 1 டீஸ்பூன் கடுகு சேர்த்து கடுகு பொரிந்தவுடன் அதனுடனே 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 3 காய்ந்த மிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.
ஸ்டேப் – 4:
மிளகாய் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் நாம் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் அதனுடனே சிறிதளவு கருவேப்பிலையையும் சேர்த்து வதக்குங்கள்.
ஸ்டேப் – 5:
இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் நாம் முன்பு ஸ்டேப்-1-ல் கூறிய அரைத்து வைத்த தூதுவளை இலை விழுதை சேர்த்து நன்கு வதக்குங்கள். அதனுடன் கரைத்து வைத்திருந்த புளித்தக்காளி கரைசலை சேர்த்த பின்னர் அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்.
ரசம் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி அதன் மேலே நாம் எடுத்துவைத்திருந்த கொத்தமல்லி இலையை நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் தயார் செய்த தூதுவளை ரசத்தை அனைவருக்கும் பரிமாறலாம்.
நீங்களும் இந்த தூதுவளை ரசத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
சளி, இருமல் மற்றும் தொண்டை வலி சரியாக இந்த குழம்பு வைத்து சாப்பிடுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |