பதம் எத்தனை வகைகள் | Pagupatham Pagapatham in Tamil
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் இலக்கண வகையை சார்ந்த பதம் என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படும் என்று தெரிந்துக்கொள்ளுவோம். பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்றெல்லாம் பிரிக்கக்கூடியதாக அமைந்துள்ள சொற்களை பகுபதம் என்று குறிப்பிடப்படுகிறது. சொற்களில் அமைந்துள்ள உறுப்புகளை பகுக்கும் போது பயன் தராமல் இருக்கும் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களைப் பகாப்பதம் என்று குறிப்பிடப்படுகிறது. வாங்க இந்த பதிவில் பதம் வகைகளை பற்றியும் அவற்றின் விளக்கத்தினையும் தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
அணி இலக்கணம் என்றால் என்ன? |
பதம் என்றால் என்ன:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து, ஒரு பொருள் தந்தால் அது பதம் எனப்படும்.
பதம் எத்தனை வகைப்படும்:
பதம் இரண்டு வகைப்படும்: அவை,
- பகாப்பதம்
- பகுபதம்
பகாப்பதம்:
ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.
(எ.கா): மரம், தேன், தலை, போல, சால
பகாப்பதம் சொற்களானது இரண்டு எழுத்துக்கள் முதலாக ஏழு எழுத்து ஈறாகத் தொடர்ந்து வரும் என்பது நன்னூல் கூறும் இலக்கணம் ஆகும்.
எடுத்துக்காட்டு:
அணி (2), அறம் (3), அகலம் (4), இறும்பூது (5), குங்கிலியம் (6), உத்திரட்டாதி (7).
இவற்றில் இரண்டு முதல் ஏழு எழுத்துகள் தொடர்ந்து வந்து சொல்லாகப் பொருள்தருவதால் இது பகாப்பதம் ஆகிட்டு.
பகாப்பதம் நான்கு வகைப்படும்:
- பெயர்ப் பகாப்பதம்
- வினைப் பகாப்பதம்
- இடைப் பகாப்பதம்
- உரிப் பகாப்பதம்
பகாப்பதம் எடுத்துக்காட்டு:
பகுபத உறுப்பிலக்கணம் |
பகுபதம்:
பகுபதம் என்னும் பிரிவிற்குள் வரும் சொற்கள் இரண்டு முதலாக ஒன்பது எழுத்துகளைக் கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டு: கூனி (2), கூனன் (3), குழையன் (4), பொருப்பன் (5), அம்பலவன் (6), அரங்கத்தான் (7), உத்திராடத்தாள் (8), உத்திரட்டாதியான் (9).
பகுபதம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்:
- பெயர்ப்பகுபதம்,
- வினைப்பகுபதம்
பெயர்ப்பகுபதம்: பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகியவற்றை குறிக்கும்.
வினைப்பகுபதம்: ஆறு வகையாக பிரிக்கப்படுகிறது:
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
பகுதி, விகுதியாகப் பிரிக்கப்படும் சொல்லில் பல உறுப்புகள் இருக்கும். அவற்றைப் பகுபத உறுப்புகள் என்று கூறுவர்.
(எ.கா): வந்தனன்
வந்தனன் என்பதை [வா+த்(ந்)+த்+அன்+அன்] என்று பிரித்து காட்டலாம். இப்போது பிரித்ததில் ஐந்து பிரிவுகள் உள்ளது.
அவை: பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை, சாரியை.
பகுதி: ஒரு பகுபதத்தில் முதலில் இருப்பது பகுதி ஆகும். இதில் வா என்பது பகுதியாகும்.
விகுதி: பகுபதத்தில் இறுதியில் இருக்கும் உறுப்பு விகுதி எனப்படும். விகுதி என்றால் இறுதி என்று பொருள்.
உவமை அணி விளக்கம் |
இதில் இறுதியில் உள்ள அன் விகுதியாகும்.
இடைநிலை: பகுபதத்தில் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.
சாரியை: பகுபதத்தில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் அன் என்பது சாரியை ஆகும்.
சந்தி: பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள த்(ந்) சந்தி எனப்படும்.
விகாரம்: பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்கள் விகாரம் எனப்படும். விகாரம் என்றால் மாறுபாடு என்று பொருள்.
வா+த்(ந்)+த்+அன்+அன்
இவற்றில் சந்தியாக வந்துள்ள த் என்னும் எழுத்து ந் ஆக மாறியுள்ளது. பகுதியாக இடம் பெற்றுள்ள வா என்னும் எழுத்து ‘வ’ என்று மாறியுள்ளது. இவ்வாறு மாறுபட்டு வருவது விகாரம் எனப்படும்.
தொடர்புடைய பதிவுகள் – லிங்கை கிளிக் செய்து படித்து பாருங்கள் |
இலக்கணம் என்றால் என்ன? |
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
வினா எத்தனை வகைப்படும்? |
புணர்ச்சி விதிகள் என்றால் என்ன? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |