பொங்கல் வைக்க உகந்த நேரம் 2023 | Pongal Vaikka Ugandha Neram 2023
தை மாதம் என்றாலே ஒரு சிறப்பு மிகுந்த மாதமாக இருக்கிறது. தை மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகையானது சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது. பொங்கல் விழாவானது கடவுள் வழிபாட்டிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு நல்ல எடுத்துக்காட்டான விழாவாகவும் இருக்கிறது. பொங்கல் அன்று வீட்டில் இருக்கக்கூடியவர்கள் முதலில் பார்ப்பது தை திருநாளான பொங்கலை எந்த நேரத்தில் வைப்பது என்பதைத்தான். எந்த ஒரு காரியத்தையும் நல்ல நேரம் பார்த்து வைப்பது பெரியவர்களின் வழக்கமாகும். நாம் இந்த பதிவில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் எது? என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம். இந்த பதிவின் மூலம் நீங்கள் படித்து தெரிந்துகொண்ட பொங்கல் வைக்க நல்ல நேரத்தை தெரியாத பலரிடம் தெரியப்படுத்துங்கள்..