ஓமத்தை சாப்பிடுவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

carom seeds in tamil

ஓமம் | Carom Seeds in Tamil

வணக்கம் நண்பர்களே..! ஓமத்தை நாம் அனைவரும் பயன்படுத்துக்கின்றனர். இந்த ஓமத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் இதை உபயோகப்படுத்துகின்றனர். அத்தகைய ஓமத்தில் நமக்கு தெரியாமல் இருக்கும் பல சுவாரஸ்ய விஷயங்களை இன்றைய பதிவில் படித்து தெரிந்துகொண்டு பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

ஓமம் பற்றிய தகவல்கள்:

omam benifits in tamil

ஓமம் சிறிய ஓவல் வடிவிலான வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த அபியாசியே குடும்பத்தை சேர்ந்த சீரகம், பெஞ்சீரகம் போன்ற வரிசையில் இந்த ஓமம் ஒன்று.

இத்தகைய ஓமம் அதிக நறுமணத்துடனும் கசப்பும் காரமும் கலந்த சுவையுடனும் காணப்படுகிறது.

 கால்சியம், கரோட்டின், இரும்புசத்து, பாஸ்பரஸ் மற்றும் நியாசின் போன்ற அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது ஓமம் ஆகும்.  

ஓமம் எகிப்தினை பூர்விகமாக கொண்டது. அதன் பிறகு இந்தியா, பாகிஸ்தான், குஜராத், ராஜஸ்தான், ஈரான், தெற்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் போன்ற நாடுகளில் ஓமம் அதிகளவு பயிரிடப்படுகிறது.

ஓமம் சாகுபடி முறை:

ஓமம் தரிசு பகுதி மற்றும் வறண்ட பகுதியில் விளைவிக்கப்படுகிறது. 1 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய தன்மை கொண்டது ஓமம்.

நீண்ட காம்புகளில் லேசான இலைகளுடன் நீளமாக வளரும் சிறப்பு வாய்ந்தது ஓமம்.

கசகசாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்

ஓமம் பயன்கள்:

omam side effects in tamil

ஓமத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. ஓமம் செரிமான கோளாறு, பசியின்மை, சளி, இருமல் போன்ற அனைத்திற்கும் விரைவில் நல்ல பலனை தருகிறது.

குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி, அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைக்கு எளிதில் நலம் பெற கூடிய ஒன்றாக பயன்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு இயற்கையாகவே ஓமத்திற்கு இருக்கிறது.

ஓமம் இலை, தண்ணீர், ஓமம் கோட்டை போன்ற அனைத்தும் ஆரம்ப காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ள காலம் வரை பயன்படுத்தப்படுகிறது.

உடல் எடை குறைவிற்கு மிகசிறந்த மருந்தாக ஓமம் பயன்படுகிறது.

ஓமம் தீமைகள்:

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த ஓமத்தை நாம் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சில தீமைகளும் இருக்கின்றன.

கர்ப்பிணி பெண்கள் ஓமம் எடுத்துக்கொள்வது வயிற்றில் வளரும் கருவிற்கு உகந்தது அல்ல. அதனால் மருத்துவரின் ஆலோசனை படி அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஓமம் சாப்பிட்டால் அது குழந்தையை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com