Curry Leaves in Tamil
ஹாய் நண்பர்களே..! எல்லோருடைய வீட்டிலும் சமைக்கும் போது சமையலில் கறிவேப்பிலை சேர்ப்பது வழக்கமான ஒன்று. சைவ மற்றும் அசைவம் எந்த சாப்பாடாக இருந்தாலும் அதில் கட்டாயமாக கறிவேப்பிலை போடுவார்கள். அதுபோல கறிவேப்பிலையில் மருத்துவ குணகங்கள் ஏராளமாக காணப்படுகிறது. முடி வளர்ச்சிக்கு சிறப்பு வாய்ந்தது கறிவேப்பிலையாகும். அத்தகைய கறிவேப்பிலையில் நமக்கு தெரியாத தகவல்களை பற்றி இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தெரிந்துகொண்டு பயன்பெறாலாம் வாங்க நண்பர்களே..!
இதையும் படியுங்கள்⇒ கசகசாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்
கறிவேப்பிலை பற்றிய தகவல்கள்:
கறிவேப்பிலை ஒரு பூக்குந்தாவரம் பிரிவினை சேர்ந்த ஒரு வகை மரமாகும். இந்த கறிவேப்பிலை மரம் 4 முதல் 6 அடி வரை உயரம் கொண்ட மரமாக காணப்படுகிறது.
கறிவேப்பிலை தாவரவியல் முறைப்படி முறயா கொயிங்கீ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இத்தகைய கறிவேப்பிலை 2 முதல் 4 செ.மீ வரை நீளமும் மற்றும் 1 முதல் 2 செ.மீ வரை அகலமும் கொண்டதாக தோற்றமளிக்கிறது.மற்ற தாவரங்களை போல இல்லாமல் இந்த கறிவேப்பிலையின் ஒவ்வொரு கொத்திலும் 10 முதல் 20 இலைகள் வரை இருக்கும் தன்மை கொண்டதாக காணப்படுகிறது.
இந்த கறிவேப்பிலை இலைகள் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே கறிவேப்பிலை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
இத்தனை சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த கறிவேப்பிலை மரமானது கறிவேம்பு மரம் என்றும் அழைக்கப்படுகிறது.
கறிவேப்பிலை வகைகள்:
கறிவேப்பிலை மூன்று வகைப்படும்.
- மலை கறிவேப்பிலை
- செங்காம்பு கறிவேப்பிலை
- வெள்ளைக்காம்பு கறிவேப்பிலை
கறிவேப்பிலை நன்மைகள்:
கறிவேப்பிலையில் வைட்டமின், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்து இருக்கின்றன.இந்த கறிவேப்பிலையை தினமும் நாம் உணவில் சேர்த்து சாப்பிடும்போது உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நல்ல பலனை தருகிறது.
செரிமான கோளாறு, உடல் சூடு, பித்தம் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
தினமும் காலையில் கறிவேப்பிலை ஜூஸ் குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவு விரைவில் குறைந்து விடும்.
இத்தகைய கறிவேப்பிலையை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை விரைவில் குறைக்க செய்கிறது.
பாகற்காயை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் |
கறிவேப்பிலை தீமைகள்:
கறிவேப்பிலை அதிக அளவு சாப்பிடும் போது குமட்டல், வயிறு வலி மற்றும் வயிறு எரிச்சல் போன்ற தீமைகள் உடலுக்கு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
உடலில் அலர்ஜி பிரச்சனைகள் உள்ளவர்கள் கறிவேப்பிலையை உணவில் குறைவாக சேர்த்து கொள்வது நல்லது.
குழந்தை பெற்றெடுத்த பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அளவுக்கு அதிகமாக இல்லாமல் குறைவான அளவில் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும்.
கறிவேப்பிலை சாப்பிட வேண்டியவர்கள்:
- கண் பிரச்சனை உள்ளவர்கள்
- சர்க்கரை நோயாளிகள்
- செரிமான கோளாறு
- கை, கால்களில் புண் உள்ளவர்கள்
- முடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள்
உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் அதனை சரியான அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
கறிவேப்பிலை சாப்பிடக் கூடாதவர்கள்:
- அலர்ஜி உள்ளவர்கள்
- குழந்தை பெற்றடுத்த பெண்கள்
- கர்ப்பிணி பெண்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவில் கறிவேப்பிலையை சாப்பிட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |