ஆளிவிதை சாப்பிடுபவர்களா நீங்கள்? முதலில் இதை பற்றி தெரிந்துகொண்டு சாப்பிடுங்கள்

flax seeds in tamil

ஆளி விதை

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஆளிவிதை பற்றிய சில அற்புதமான தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த ஆளிவிதைகளை பலரும் பயன்படுத்தி வந்திருப்பார்கள், இவை சிலருக்கு நன்மைகளையும், ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தி இருந்திருக்கும். ஆனால் நம்  மருத்துவ பயன்களுக்காக பயன்படுத்தும் பொழுது இந்த ஆளிவிதைகள் எப்படி உருவானது, அது எதற்கு பயன்படுகிறது  என்று தெரிந்துகொள்வது அவசியம் மேலும் இந்த ஆளிவிதை பற்றிய தகவல்களை நம் பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Jowar பற்றிய சில அற்புதமான தகவல்கள்

ஆளிச்செடியின் அமைப்பு மற்றும்  விவரங்கள்:

இந்த ஆளிச்செடியின் நார் ஆனது தமிழில் “சணல்” என்றும் அழைக்கபடுக்கிறது.

இந்த ஆளிச்செடியானது மற்ற செடிகளை போல் அல்லாமல் நிமிர்ந்து நேராக வளர கூடிய ஒருவகை செடியாகும், இதனுடைய தண்டுபகுதியானது 120 செ.மீ உயரம் வரை வளரும். இவை மெலிதான 2-4 செ.மீ நீளமும் 3 மி.மீ அகலமுள்ள கொண்ட நீலம் பச்சை நிறத்தின் இலைகளை கொண்டுள்ளது. இந்த செடியில் வளரும் மலர்கள் ஐந்து வகையான நீல நிறத்தையும் கொண்டுள்ளது.  இதனுடைய காய்யானது 5-9 மி.மீ விட்டமும் 4-7 மி.மீ நீளமும் கொண்டுள்ளது.

இந்த ஆளிச்செடியானது நாருக்காகவும் வித்திற்காகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆளிச்செடியின் விஞ்ஞானப் பெயர் லைனம் யுசிட்டாட்டிசிமம் (Linum usitatissimum)  என்றும் அழைக்கபடுக்கிறது. இதனுடைய வளர்ச்சிகள் கருங்கடலுக்கும், காசுபியான் கடலுக்கும் இடையில் அதிகமாக வளரப்படும் செடியாகும்.

Aali Vithai inTamil:

ஆளிவிதையின் எண்ணெய் ஆனது பல நூற்றாண்டு காலமாக வண்ணச் சாயங்களில் மெருகெண்ணெய்களிலும் (varnish) உலரவைக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது.. இந்த விதைகளை கொண்டு எண்ணெய்யாக ஆட்டி பல உணவு பொருட்களிலும் சேர்த்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆளிவிதைகளில் இரண்டு வகைகள் உள்ளன, அவை மஞ்சள் நிறம் மற்றொன்று காவி நிறத்தை கொண்டுள்ளது. இந்த ஆளிவிதையானது பல ஆண்டுகளாக உணவு பொருளாக இருந்து வந்தாலும், இவை கால்நடை தீவனங்களுக்காகவும், சாயங்களுக்காகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் இரண்டு நிறத்தில் உள்ள ஆளிவிதைகளானது சம அளவு கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. மீன் உணவுகளை அதிகமாக சாப்பிடாதவர்கள் ஒமேகா 3 கொழுப்பு சத்தை கொண்ட ஆளிவிதைகளை சாப்பிடுவது நல்லது என்றும் கருதப்படுக்கிறது.

அதோடு மட்டுமன்றி கேக் மற்றும் ரொட்டி செய்வதற்கு, முட்டைக்கு பதிலாக பயன்படுத்தும் பொருளாகவும் இருக்கிறது. இந்த ஆளிவிதையின் எண்ணெய் ஆனது பால் சுரப்பதை கூட்டு பொருளாக பரிந்துரைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com