Google Pay கஸ்டமர் கேர் நம்பர் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Google Pay ஆப்

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் நவீன காலத்தில் அனைவரும் உபயோகப்படுத்த கூடிய Google Pay ஆப் பற்றி பார்க்கப்போகிறோம். கூகுளை பே ஆப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ஆப். பணம் அனுப்பவும், திரும்ப பெறவும், பில் கட்டுவதற்கும் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த ஆப் மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கு எந்த ஒரு தொகையும் செலுத்த வேண்டியது இல்லை. இலவச பயன்பாடாக இருக்கிறது. Google Pay-யில் நமக்கு தெரியாத விஷயங்களும் இருக்கின்றன. நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்பும் போது வேறு எதும் சந்தேகம் இருந்தால் தெரிந்து கொள்வதற்கு Google Pay கஸ்டமர் கேர் நம்பர் இருக்கு. ஒரு சிலருக்கு அந்த நம்பர் தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். Google Pay கஸ்டமர் கேர் நம்பர் தெரிந்துகொள்வதற்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Google-யில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று டிப்ஸ்..!

கூகுளை பே என்றால் என்ன?

Google Pay என்பது Unified Payments Interface (UPI) என்ற தளத்தினால் அமைக்கப்பட்டது. UPI தளத்தினால் பணம் அனுப்பும் போது உங்கள் வீட்டில் இருந்த படியே வங்கி கணக்கு இல்லாமல் மற்றொருவருக்கு பணம் அனுப்பமுடியும். தற்போதைய வங்கி கணக்கை பயன்படுத்தி நீங்கள் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ முடியும். கூகுள்  பே மூலம் உங்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும் முடியும். எந்த ஒரு ஹேக்கிங்கை தடுக்கவும் மோசடி நடைபெறாமல் இருக்கவும் உதவுகிறது.

Google Pay ஆப் கஸ்டமர் கேர் நம்பர்:

1800-419-0157 என்ற google pay கஸ்டமர் கேர் நம்பரை அழைப்பதன் மூலம் நீங்கள் எந்த விதமான உதவியையும் பெற முடியும். இந்த நம்பரை அழைப்பதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த உதவியை நீங்கள் 24 மணி நேரமும் பெறலாம்.

Google Pay பயன்பாட்டில் உங்களுடைய மொபைலில் உதவி மற்றும் கருத்து என்ற பகுதியை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் உதவியை பெறலாம். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆலோசனை நிபுணர் உங்களுக்கு உதவுவார்.

Google Pay-யின் அம்சங்கள்: 

  • Google Pay பல மொழிகளுக்கு ஆதரவை வழங்குகிறது.
  • உங்களுடைய payment ஆப்பை பாதுகாக்க mobile id அல்லது finger press ஸ்கேனரை பயன்படுத்தலாம்.
  • Tez Shield என்ற தனியாள் பாதுகாப்பு அம்சமானது மோசடியை கண்டறியவும், ஹேகிங்கை தவிர்க்கவும், உங்களின் சரியான அடையாளத்தை கண்டுபிடிக்கவும் உதவுகிறது.
  • Cash Back பிரிவில் நீங்கள் Google-லில் இருந்து பெற்ற தொகையினை கண்டறியலாம்.
  • உங்களின் நண்பருக்கும் Google Pay ஆப்பை பரிந்துரைப்பது மூலம் நீங்கள் Cash Back-கை பெறலாம்.
  • எல்லா UPI ஆபிஸிலும் ஒரு நாளைக்கு 1 லட்சம் வரை பணம் அனுப்பலாம். அதற்கு மேல் பணம் அனுப்ப முடையது.
  • Google Pay ஆப்-யில் ஒரு நாளைக்கு 10 முறை மட்டும் தான் பணம் அனுப்ப முடியும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips in Tamil

 

Advertisement