ஆன்லைனில் குடும்ப தலைவரின் புகைப்படம் மாற்றம் செய்வது எப்படி..! how to change smart card photo online..!
how To Change Photo In Ration Smart Card: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் சிலருக்கு புகைப்படம் மாறி வந்து இருக்கும். இதை ஆன்லைன் மூலம் சுலபமான முறையில் எப்படி மாற்றலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். குடும்ப அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த குடும்ப அட்டையில் வீட்டின் தலைவரின் போட்டோ மாற்றம் செய்து வந்தால் அதை எளிமையாக ஆன்லைன் மூலம் மாற்றி அமைக்க இப்போது ஆப்ஷன் கொண்டுவரப்பட்டுள்ளது. சரி வாங்க இப்போது மாற்றம் செய்து வந்த போட்டோவை எப்படி ஆன்லைனில் மாற்றலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்..!
![]() |
இணையதள முகவரி:
ஆன்லைன் மூலம் புகைப்படம் மாற்றுவதற்கு https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்லவும்.
புகைப்படம் மாற்றம் செய்வதற்கு:
முதலில் வலைதளத்திற்கு சென்றதும் உங்களுடைய மொபைல் எண் எந்த எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்து உள்ளீர்களோ அந்த எண்ணை கொடுத்து கீழே ஒரு கேப்ட்சா எண் இருக்கும்.
அந்த எண்ணை கொடுத்து என்டர் செய்து சம்மிட் செய்தால் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு 6 எண்கள் வரும். அந்த எண்ணை கொடுத்து இப்போது லாகின் செய்யவும்.
ஆன்லைனில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பெயர் பட்டியலை பார்ப்பது எப்படி? |
ஸ்டேப் 1:
லாகின் செய்த பிறகு இந்த பக்கம் ஓபன் ஆகும். இவற்றில் “அட்டை பிறழ்வுகள்” என்பதை க்ளிக் செய்யவும்.
ஸ்டேப் 2:
அடுத்து “புதிய கோரிக்கை” என்ற ஆப்ஷன் வரும். அதை இப்போது க்ளிக் செய்யவேண்டும். க்ளிக் செய்த பிறகு கீழே சேவையை தேர்வு செய்யவும் என்ற ஆப்சன் இருக்கும். அவற்றில் “குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றம்” என்பதை கிளிக் செய்யவேண்டும்.
குடும்ப அட்டை வகைகள் |
ஸ்டேப் 3:
அடுத்து கீழே குடும்ப தலைவரின் புகைப்படம் இங்கு இருக்கும். அதில் பதிவிறக்கம் என்பதில் புகைப்படத்தினை நேரடியாக மாற்றம் செய்ய முடியாது.
இதற்கான வேறொரு ஆப்ஷன் குடும்ப தலைவராக ஆண் இருந்தால் அதை நீக்கம் செய்துவிட்டு வீட்டின் பெண்ணை கார்டில் சேர்த்து அப்லோட் செய்து சம்மிட் செய்தால் எளிமையாக புகைப்படத்தினை மாற்றிவிடலாம்.
ஸ்டேப் 4:
ஆன்லைனில் குடும்ப தலைவரை மாற்றாமல் போட்டோ மாற்றுவதற்கு ஆன்லைனில் இதுவரை ஆப்ஷன் கொண்டுவரவில்லை. இதற்கு நேரடியாக தாலுக்கா அலுவலகம் சென்றுதான் மாற்ற முடியும்.
இதில் பெயர்களை மிகவும் சுலபமான முறையில் மாற்றலாம். அதாவது குடும்ப அட்டையில் நபர்களை பேரன் இடத்தில் பேத்தி என்றும், மகன் இடத்தில் மருமகன் இருந்தால் அந்த பென்சில் ஐக்கானை க்ளிக் செய்து அவற்றில் உறவு முறையினை சரியாக தேர்வு செய்து டிக் கொடுக்கவும்.
அடுத்து குடும்ப தலைவரின் பெயரினை மாற்ற வேண்டுமென்றால் பெயரினை சரியாக கொடுத்து புகைப்படத்தில் உள்ள இடத்தில் 5 mb அளவிற்கு(jpeg, png, jpg) format-ல் புகைப்படம் இருக்க வேண்டும்.
ஸ்டேப் 5:
போட்டோ அப்லோட் செய்த பிறகு கீழே காரணம் என்னவென்று தமிழில் (அ) ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு “ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
அவற்றில் ஆதார் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து “பதிவேற்று” என்பதை கொடுக்க வேண்டும். பிறகு உறுதிப்படுத்துதல் என்ற கட்டத்தில் டிக் செய்தால் பதிவேற்று என்ற ஆப்ஷன் வரும். க்ளிக் செய்த பிறகு குறிப்பு எண் ஒன்று கொடுப்பார்கள். அந்த எண்ணை வைத்து நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
![]() |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |