இப்படி உள்ள பூண்டை மட்டும் வாங்கவே கூடாதாம்..

how to select garlic in tamil

பூண்டு வகைகள் பெயர்கள்

பூண்டில் பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நல்ல பூண்டை வாங்க வேண்டும்  என்று தெரியுமா.? இதுல என்ன இருக்கு கடையில் விற்கும் பூண்டுகளை விலையை பார்த்து வாங்க வேண்டும். விலையை மட்டும் பார்த்தால் மட்டும் போதாது. பூண்டையும்  பார்த்து வாங்க வேண்டும். அது எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

பூண்டின் வகைகள்:

மார்க்கெட்டில் 5 வகையான பூண்டு வகைகள் கிடைக்கிறது, அவை

  1. தரை பூண்டு அல்லது நாட்டு பூண்டு 
  2. மலை பூண்டு
  3. ஒரு பல் பூண்டு 
  4. சைனா பூண்டு 
  5. கருப்பு பூண்டு  

தரை பூண்டு அல்லது நாட்டு பூண்டு:

தரை பூண்டு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் சமவெளியில் விளையக்கூடியது. வெள்ளை நிறத்தில் இருக்கும்.

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் என்ன பலன்..? வறுத்த பூண்டு பயன்கள்..!

மலை பூண்டு:

மலை பூண்டு

மலை பூண்டு கொடைக்கானல்,மூணாறு போன்ற மலை பகுதிகளில் விளைய கூடியது. இவை அழுக்கு படிந்தது போல் இருக்கும். இந்த பூண்டை உரித்து பார்த்தால் ரோஸ் நிறத்தில் இருக்கும். தரை பூண்டோடு ஒப்பிட்டு பார்க்கும் போது மலை பூண்டிற்கு மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. எதனால் என்றால் மலைப்பகுதியில் உள்ள நீரின் வெப்பநிலை, தட்ப வெப்பநிலை, நிலத்தின் தன்மையை பொறுத்து கூறப்படுகிறது. 

ஒரு பல் பூண்டு:

ஒரு பல் பூண்டு

மற்ற பூண்டுகள் போல நிறைய பற்கள் இருக்காது. ஒரே ஒரு பற்கள் மட்டும் தான்  இருக்கும். இவை காஸ்மீர், இமாச்சலபிரதேசம், அதிகமாக விளைய கூடியது. 

சைனா பூண்டு:

சைனா பூண்டு

பூண்டு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது சைனா தான். இந்த பூண்டுகள் வெள்ளையாகவும், பெரிய பல்லாகவும் இருக்கும். இயற்கையாகவே பூண்டுகளில் கருப்பு புள்ளிகள் இருக்கும். ஆனால் வாங்குபவரகள் கருப்பு புள்ளிகள் இல்லாமல் வெள்ளையாக இருப்பதை தான் வாங்குவார்கள்.

 பூண்டு வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக குளோரின் வைத்து பிளீச் செய்வார்கள். இவை உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும். பூண்டை விளைவிக்கும் போது மெத்தில் புரோமைடு என்பதை பயன்படுத்துகிறார்கள். இவை பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த பூண்டை சாப்பிடுபவர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பூண்டை எப்படி கண்டுபிடிக்கிறது என்றால் சைனா பூண்டு பளபளவென்று இருக்கும், மேல் பகுதியில் வேரை அகற்றிருப்பார்கள். இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.  

கருப்பு பூண்டு:

கருப்பு பூண்டு

கருப்பு பூண்டு என்பது நேரடியாக விளைவிக்கப்படுவதில்லை. இதை சாதாரணமான பூண்டை பிரிமிண்டஷன் ப்ரோஸ்ஸ்ஸ்க்கு உட்படுத்தப்பட்டு கருப்பு பொன்னடி உருவாக்குகின்றனர்.controlled atmosphere-ல 60 டிகிரி செல்சியசிஸில் டெம்ப்ரேச்சர்யில்  கட்டுப்படுத்தப்பட்ட ஈரப்பத்ததில் 3 வாரங்களுக்கு அப்படியே வைத்திருப்பார்கள். இப்படி வைத்திருக்கும் பார்த்து பூண்டுகள் கருப்பு நிறத்தில் மாறிவிடும்.

கற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil