உங்கள் குழந்தைகள் மொபைலே பார்க்கிறார்களா..! அவர்களை மாற்றுவதற்கு செம ஐடியா

குழந்தைகள் மொபைல் பார்ப்பதை தடுக்க வழிமுறைகள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் குழந்தைகள் மொபைல் பார்ப்பதை தடுப்பதற்கான வழிகளை தான் பார்க்க போகிறோம். நீண்ட நேரம் அலைபேசியைப் பயன்படுத்துவோருக்கு பலவிதமான உடல் பிரச்சனைகள்  ஏற்படுகின்றது. ஸ்மார்ட்ஃபோன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான கேன்சர் கட்டிகள் உருவாகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனால் குழந்தைகள் மட்டுமில்லை அனைவருமே மொபைலை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. அதனால்  குழந்தைகளை அதிக நேரம் மொபைலில்  செலவிடாமல் இருப்பதற்கு சில டிப்ஸை பார்ப்போம்.

இதையும் படியுங்கள் ⇒ குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் 

விளையாடுவது எப்படி.?

மொபைலுக்கு அடிமை

குழந்தைகள் ஒரு செயல் செய்கிறார்கள் என்றால் அதை செய்யாதே என்றால் அதை தான் செய்யும். அதனால் குழந்தைகளை இப்படி பண்ணுவோமா என்று அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். உங்கள் குழந்தை மொபைல் பார்த்து கொண்டே இருந்தால் விளையாடலாமா என்று கேட்டு வெளியில் அழைத்து சென்று விளையாடுங்கள். இப்படி செய்தாலே குழந்தைகள் மொபைல் தா அம்மா என்று கேட்கமாட்டார்கள். விளையாடலாமா என்று தான் கேட்பார்கள்.

புத்தகம் வாசிப்பது எப்படி.?

புத்தகம் வாசிப்பது எப்படி

உங்கள் குழந்தைகளுக்கு  ஆரம்பத்திலுருந்து மொபைலை கொடிக்காதீர்கள். ஓவியம் வரைதல், நடனம், புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுத்துங்கள். இப்படி நீங்கள் செய்யும் போது குழந்தைகளுக்கு மொபைல் நினைவே வராது.

மொபைலுக்கு அடிமை:

மொபைலுக்கு அடிமை

 

உங்கள் குழந்தைகள் எதாவது அலும்பு செய்யும் போது மொபைலை கொடுத்து பழக்க படுத்தாதீர்கள். நீங்கள் அப்படி செய்யும் போது அவர்கள் மொபைலுக்கு அடிமையாகி விடுவார்கள்.

நேரத்தை செலவிடுங்கள்:

நேரத்தை செலவிடுங்கள்

குடும்பத்தில் இருப்பவர்கள் மொபைல் மற்றும் வேலைகள் பார்க்காமல் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். அப்படி நீங்கள் பேசும் போது குழந்தைகளை புரிந்து கொள்ள முடியும். உங்களை பற்றியும் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். free -யா இருக்கும் நேரத்தில் குழந்தைகள் மொபைல் பார்க்காமல் உங்களுடன் பேச நினைப்பார்கள். விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். இதன் மூலம் குழந்தைகள் மொபைல் பார்க்காமல் தடுக்கலாம்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பாதிக்கும் சமூக ஊடகங்கள்:

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பாதிக்கும் சமூக ஊடகங்கள்

குழந்தைகளுக்கு சில சமூக ஊடகங்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கலாம். எல்லாம் சமூக ஊடகங்களையும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு என்று போன் வாங்கி தர கூடாது.

குழந்தைகளுடன் செலவிடும் நேரமே அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதுடன், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்!

குழந்தைகள் mobile க்கு அடிமையாகாமல் இருப்பதற்கு செம ஐடியா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil