இயைபு சொற்கள் என்றால் என்ன? | Iyaibu Sorkal Endral Enna

Iyaibu Sorkal Endral Enna

இயைபு சொற்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு

Iyaibu Sorkal in Tamil: தமிழ் மீதும், இலக்கணம் மீதும் ஆர்வம் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இந்த தொகுப்பில் இலக்கணத்தில் ஒன்றான இயைபு சொற்கள் பற்றி பார்க்கலாம். பள்ளி பாடங்களில் எதுகை சொற்கள், மோனை சொற்கள் படிக்கும் போது கண்டிப்பாக இந்த இயைபு சொற்களையம் படித்திருப்போம். நாம் இந்த பகுதியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இயைபு சொற்கள் என்றால் என்ன மற்றும் அதன் வகைகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இயைபு சொற்கள் என்றால் என்ன?

 • ஒரு பாடல் அல்லது செய்யுளில், சீர் அல்லது அடிகளில் அடியிறுதியில் ஓர் எழுத்து அல்லது பல எழுத்துக்கள் ஒன்றாக வருவது இயைபு எனப்படும்.

இயைபு சொற்கள் எடுத்துக்காட்டு:

செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே 

 • இதில் போதினிலே, காதினிலே என்ற எழுத்துக்கள் ஒன்றி வந்ததால் இது இயைபு சொற்கள் எனப்படும்.

வகைகள்:

இயைபு இரண்டு வகைப்படும் அவை

 1. அடி இயைபு
 2. சீர் இயைபு

அடி இயைபு:

ஒரு பாடலில் அடிதோறும் இறுதி எழுத்து, சொல், அசை போன்றவை ஒன்றாக வந்தால் அது அடி இயைபு எனப்படும்.

உதாரணம்: கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்

சீர் இயைபு:

 • ஓர் அடியில் இருக்கும் சீர்களின் இறுதி எழுத்து முதலாக ஒன்றி இயைய (ஓர் உவம உருபு) வருவது சீர் இயைபு எனப்படும்.
 1. இணை
 2. பொழிப்பு
 3. ஒரூஉ
 4. கூழை
 5. கீழ்க்கதுவாய்
 6. மேற்கதுவாய்
 7. முற்று என ஏழு வகைப்படும்.

இணை இயைபு:

 • ஒரு பாடலில் ஒன்று மற்றும் இரண்டாம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது இணை இயைபு எனப்படும்.

(எ.கா) முகிலே பொழிலே

பொழிப்பு இயைபு:

 • செய்யுளில் ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு இயைபு எனப்படும்.

(எ.கா) அயலே முத்துறழ் மணலே

ஒரூஉ:

 • பாடலில் ஒன்றாம் மற்றும் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ இயைபு எனப்படும்.

(எ.கா) நிழலே இனியதன் அயலது கடலே

கூழை:

 • பாடலில் ஒன்று, இரண்டு, மூன்று சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது கூழை இயைபு எனப்படும்.

(எ.கா) நகிலே வல்லே இயலே

கீழ்க்கதுவாய்:

 • செய்யுளில் ஒன்று, மூன்று, நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் இயைபு எனப்படும்.
 • (எ.கா) வில்லே நுதலே வேற்கண் கயலே

மேற்கதுவாய்:

 • பாடலின் அடியில் ஒன்றாம், மூன்றாம், நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் இயைபு எனப்படும்.

(எ.கா) பல்லே தவளம் பாலே சொல்லே

முற்று:

 • ஒரு பாடலின் அடியில் சீர் முழுவதும் உள்ள இறுதி எழுத்து ஒன்றி வருவது முற்று இயைபு எனப்படும்.

(எ.கா) புயலே குழலே மயிலே இயலே

இயைபு தொடை என்றால் என்ன?

 • Iyaibu Thodai in Tamil: ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளில் உள்ள இறுதி எழுத்து அல்லது இறுதி சொல் ஒன்றாக வந்தால் அது இயைபு தொடை எனப்படும்.
 1. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
 2. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றுதல்.
 3. ஒரு அடியிலிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
 4. ஒரு அடியில் வரும் இறுதிச்சொல் அந்த அடியில் வரும் இன்னொரு சீரிலாவது ஒன்றி வருதல்.
 • மேற்கூறப்பட்ட நான்கு வகைகளில் சொற்கள் வந்தாலும் அது இயைபு தொடை எனப்படும்.

இயைபு தொடை எடுத்துக்காட்டு:

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

மேலே உள்ள பாடலில் மூன்று அடிகளில் உள்ள இறுதி எழுத்து னை” என்ற எழுத்தில் முடிவதால் இதனை இயைபு தொடை என்கிறோம்.

எதுகை மோனை சொற்கள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil