எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது..?

Kizhamai Jothidam In Tamil

ஆன்மிகம் கூறும் கிழமை பலன்கள்..! kilamai palangal..!

Kizhamai Jothidam In Tamil: நண்பர்களுக்கு அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் வாரத்தில் ஏழு நாட்களில் எந்தெந்த கிழமையில் என்ன செயல்கள் செய்தால் அதனால் கிடைக்கும் பலன்களை பற்றி தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். காலத்தினையும் நேரத்தினையும் பார்க்காமல் நாம் எந்த ஒரு நற்செயலையும் தொடங்குவது இல்லை. காலமும் நேரமும் செய்யாததை வேறு எதுவும் செய்து விடாது என்பது காலா காலத்திலிருந்து இருந்து வரும் பழமொழியாக விளங்குகிறது. காலம், நேரம் போன்று தான் கிழமை பலன்களும் அமைந்துள்ளது. இந்த கிழமையில் இதை செய்தால் நல்லது என்று ஆன்மீகம் கூறும் ரகசிய தகவலை இப்போது படித்தறியலாம் வாங்க..!

newபெண்கள் எந்த கிழமையில் ருதுவானால் என்ன பலன்..!

ஞாயிற்றுக்கிழமை பலன்:

Kizhamai Jothidam In Tamilஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் கோவில் காரியங்கள் செய்வதற்கு மிகவும் உகந்த நாள். மேலும் ஞாயிற்றுக்கிழமையில் அரசாங்கம் சம்மந்தமான கடிதம், பெற்றோர்களுக்கு தேவைப்படும் உதவிகள் செய்ய, உடல் ஆரோக்கியம் போன்ற செயல்கள், திருமணம் செய்வதற்கு நல்ல நாளாக ஆன்மீக சாஸ்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஞாயிற்றுக்கிழமையில் இரும்பு போன்ற பொருளை வாங்குவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

திங்கட்கிழமை பலன்:

Kizhamai Jothidam In Tamilதிங்கள் கிழமையில் புதிய வீடு, புதிதாக வீடு கட்ட மனை வாங்க, இரும்பு போன்ற பொருள்களை வாங்குவதற்கு திங்கட்கிழமை உகந்தது அல்ல.  மேலும் திங்கள் கிழமைகளில் தங்கம், வெள்ளி போன்ற நகை சம்மந்த பொருளை வாங்கலாம்.

தாய்க்கு உதவிகள் செய்யலாம். எந்த செயலையும் யோசித்து தொடங்குவதற்கு மிக சிறப்பான நாள். வெளியூர் பயணம் மற்றும் பயண தொடர்பான வேலைகளை செய்ய உகந்த நாள் திங்கள்கிழமை.

செவ்வாய்க்கிழமை பலன்:

Kizhamai Jothidam In Tamilசெவ்வாய்கிழமையில் புதிய வீடு கட்டுபவர்கள் வீட்டிற்கான திட்டத்தை மேற்கொள்ளலாம். அடுத்து மனை பார்க்க செல்வதற்கு செவ்வாய் கிழமை சிறப்பான நாள். மேலும் இந்த நாளில் மருந்து மாத்திரை போன்றவை, இரும்பு பொருள்கள், தொழில் செய்வதற்கான உபகரணங்கள் போன்றவைகளை செவ்வாய் கிழமையில் வாங்கலாம்.

புதன் கிழமை பலன்:

புதன் கிழமையில் நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். நம் பெரியவர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவது வழக்கம். அவர்கள் கூறும் அளவிற்கு புதன் கிழமை மிக சிறப்பான நாள்.

புதன் கிழமையில் நவீன பொருள், அறிவு சார்ந்த பொருட்கள், கல்வி செல்வம் தரும் புத்தகம் போன்றவற்றை இந்த நாளில் வாங்கலாம். நாம் புதிதாக எந்த ஒரு முடிவையும் புதன் கிழமையில் எடுத்தால் நமக்கு வெற்றி நாளாக அமையும்.

newகுழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..!

வியாழக்கிழமை பலன்:

Kizhamai Jothidam In Tamilவியாழக்கிழமையில் புதிய உடற் பயிற்சிகளையும், தெரிந்துகொள்ளாத விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு உகந்த நாள். குரு பகவானுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளதால் கலைகள் போன்ற பயிற்சிகளை கற்றுக்கொள்வதற்கு சிறப்பான நாள் வியாழக்கிழமை.

மேலும் ஜாதகம் பார்ப்பது, தியான பயிற்சி செய்வது, ஆலயம் சென்று தரிசனம் செய்ய வியாழக்கிழமை சிறந்தது.

வெள்ளிக்கிழமை பலன்:

kizhamai jothidam in tamil வெள்ளிக்கிழமை என்றாலே அனைவருக்கும் தெரிந்த மங்களகரமான நன்னாள் ஆகும். வெள்ளி கிழமையில் மங்கள நிகழ்ச்சிகள், கடன் வாங்க, வாகனம், விலை உயர்ந்த பொருட்கள், நகை, ஆபரணம் போன்ற பொருள் வாங்க, கோவிலுக்கு செல்ல, வங்கி கணக்கு துவங்குவதற்கு, பணம் சேமித்து வைத்தல் போன்ற செயல்களை செய்வதற்கு வெள்ளிக்கிழமை உகந்த நாள்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று பணத்தினை வீண் செலவு செய்யாமல் இருப்பது நல்லது.

சனிக்கிழமை பலன்:

kizhamai jothidam in tamil சனிக்கிழமையில் மருத்துவமனை செல்வது, விவசாயம் சார்ந்த செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது. செய்யும் தொழிலுக்கு ஏற்ற இரும்பு பொருள்களை வாங்க சனிக்கிழமையில் வாங்கலாம்.

வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட பிரச்சனைகள், வழக்கு தொடர்பான விஷயங்ககள் சாதகமாக முடிவு பெற இந்த நாளை பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு செயலை சரியாக செய்ய இயலாத நேரத்தில் பிள்ளையார் கடவுளை வணங்கிய பிறகு செயலை செய்வது மிகவும் நல்லது.

newகருடனை எந்த கிழமையில் தரிசித்தால் என்ன பலன்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்