எம் சாண்ட் மணல் வீடு கட்ட சிறந்ததா? | M Sand Benefits in Tamil

Advertisement

M sand நல்லதா? 

வணக்கம் நண்பர்களே.. வீடு கட்டுவது என்பது அனைவருக்குமே கனவாக இருக்கக்கூடிய ஒன்று. வீட்டினை தரத்துடன் கட்ட வேண்டியது மிகவும் அவசியம். வீட்டை தரத்துடன் கட்ட நாம் முதலில் சரியான மணல் வகையை தேர்வு செய்ய வேண்டும். அனைவருமே ஆற்று மணலை சிமெண்ட் கலவையில் கலந்து வீட்டை கட்டினால் வீடு நல்ல உறுதியாக பல நாள் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மணல் எவ்வளவு விலையாக இருந்தாலும் முழு வீட்டையும் கட்டி முடித்து விடுகிறார்கள். வாங்க இந்த பதிவில் எம் சாண்ட் மணலை கொண்டு வீடு கட்டலாமா? என்று முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..

எம் சாண்ட் மணல் விலை:

  • எம் சாண்ட் விலை: எம் சாண்ட் மணலின் 1 யூனிட் விலை ரூ.6,000/-

எம் சாண்ட் மணலின் சிறப்பு | m sand in tamil:

M sand மணலானது கான்கிரீட் வீட்டிற்கு மிகவும் ஏற்ற ஒன்று. முக்கியமாக வீடு கட்டுவதற்கு இந்த எம் சாண்ட் மணலில் எந்த விதமான கலப்படமும் இல்லை. அதுவே ஆற்றுமணல் எடுத்துக்கொண்டால் அதில் கலப்படம் அதிகமாக இருக்கிறது. ஆற்றுமணலில் சிலிக்கா எனும் நுண் தாது இருக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதா?

ஆற்று மணலானது உடலுக்கு ஏற்றது இல்லை. இந்த சிலிக்கா எனும் நுண் தாதானது  M sand-ல் இல்லை.

எம் மணல் Vs ஆற்று மணல்:

M sand இல் உள்ள ஒரே குறை என்ன தெரியுமா? particle size மட்டும் தான். ஏனெனில் M sand இல் உள்ள துகள்கள் ஒழுங்கற்ற முறையில் இருக்கும்.

இதில் நன்றாக சலித்த மணலையே பூச்சு வேலைக்கு உபயோகப்படுத்த வேண்டும். வீட்டில் விரிசல் எனும் பிரச்சனையானது எப்போது ஏற்படும் என்றால், மணலில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது தான் ஏற்படும்.

மணலின் தன்மை:

ஆற்று மணலில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதுவே M sand எனும் போது கலவையில் ஈரப்பதத்தை சற்று அதிகமாகவே வைத்திருக்க வேண்டும்.

கட்டிடங்களின் பலம்:

கட்டிடங்களை பொறுத்தவரை பலம் என்னமோ M sand கட்டிடத்தில் தான் அதிகமாக உள்ளது. M sand மணலும் இயற்கை மணலை போன்றுதான் இருக்கும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் M sand தான் அதிகமாக கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு சோதனைகளில் ஆற்று மணலை விட M sand சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பொருட்கள் விலை நிலவரம்

கவனிக்க வேண்டியவை:

நாம் M sand ஐ வாங்கும் போது ஒரு விஷயத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

இயற்கையான M sand மணலானது கருப்பு நிறம் கொண்டதாக இருக்கும். இதனையும் மீறி உங்களுக்கு மணல் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் வாங்கும் M sand நிறுவனத்தில் ஆய்வகம் ஒன்று இருக்கும்.

அந்த ஆய்வகத்தின் மூலம் மணலுடைய உண்மை தன்னையை உறுதிப்படுத்துமாறு ஆய்வகத்தில் உள்ளவர்களிடம் தாராளமாக கேட்கலாம். ஏனெனில் கலவையில் M sand மற்றும் சிமெண்ட் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும்.

கவனமாக இருக்கவும்:

இந்த இடத்தில் தான் தவறு நடக்கும். M sand சிமெண்ட் கருப்பு நிறத்தில் இருப்பதால், குறைவாக சிமெண்ட் கலந்தாலும் ஒன்றுமே தெரியாது.

அளவுகள்:

சுவர் கட்டப் பயன்படும் எம் சாண்ட் 4mm அளவினை கொண்டது. சுவர் பூசுவதற்குப் பயன்படும் பி சாண்ட் 2mm அளவு கொண்டது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement