நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Nanbargal Kanavil Vanthal Enna Palan

Nanbargal Kanavil Vanthal Enna Palan

பழைய நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Are Friends Coming In Dream in Tamil 

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்க போகிறோம். எல்லாருக்கும் ஒரே விதமான கனவுகள் வருவது இல்லை, அப்படி வந்தாலும் ஒரு சிலருக்கு நிஜ வாழ்க்கையில் நடக்கிறது. இன்னும் சிலருக்கு காலையில் எழுந்ததும் கனவுகளை மறந்து விடுவார்கள். ஒரு நாள் நிஜ வாழ்கையில் நடக்கும் பொழுது இந்த நிகழ்வுகள் முன்பு நடந்தது போல் உணருவீர்கள் அப்படி உணர்ந்த வாசகர்கள் இந்த பதிவை முழுவதையும் படியுங்கள். இன்று நண்பர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி தெளிவாக காண்போம்.

கனவு பலன்கள்

நண்பன் அல்லது தோழி கனவில் வந்தால் என்ன நடக்கும்:

 • தன் நண்பனை அல்லது தோழியை கனவில் கண்டால் கனவு காண்பவர்களை யாரோ ஒருவர் சந்திக்க வருவார் என்பதை குறிக்கும். மேலும் நம்பிக்கை கொண்ட எதிர்காலம் உண்டு என்பதை குறிக்கிறது.

நண்பர்களுடன் பயணம் செல்வது போல் கனவு கண்டால்:

 • நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்வது போல் கனவில் கண்டால் உங்கள் நண்பன் அல்லது தோழியுடன் பிரிவு வரும் என்பதை குறிக்கும் அல்லது வேறு யாருடையாவது இருக்கும் நட்புறவு பிரிவு ஏற்படும் என்பதை குறிக்கிறது.

நண்பர்களுடன் சந்தோசமாக இருப்பது போல் கனவில் கண்டால்?

 • நண்பர்களுடன் சந்தோசமாக இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு தொழிலில் லாபம், கைக்கு அதிகம் பணம் கிடைக்க போகிறது என்பதை உணர்த்தும்.

நண்பர்களிடம் பொய் சொல்வது போல் கனவில் கண்டால்?

 • வாழ்கையில் யாரோ ஒருவரை வெறுக்க போகிறிர்கள் என்ற அர்த்தம்.

கனவில் புது நபர்களை என் நண்பன் என்று சொல்வது போல் கனவில் கண்டால்?

 • கனவு காண்பவர்கள் ஏதோ தவறு செய்ய போகிறீர்கள் என்றும் முன் செய்த தவறுகளை விரைவாக சரி செய்ய அறிவுறுத்துகிறது என்று அர்த்தம்.
இறப்பது போல் கனவு 

நண்பர்களை பெருமைப்படுத்தும் வகையில் கனவு கண்டால்?

 • நண்பர்கள் மீது வைத்த முழு நம்பிக்கையும் இழக்க போகிறிர்கள் என்று அர்த்தம்.

நண்பர்களே தேடி சென்று பார்ப்பது போல் கனவில் கண்டால்?

 • கனவு காண்பவர்கள் பணியில் பதவி உயர்வு கிடைக்கபோகிறது என்பதை உணர்த்துகிறது. மேலும் பணியில் பொறுமை தேவை என்பதையும் உணர்த்துகிறது.

நண்பர்களிடம் சண்டை போடுவது போல் கனவில் கண்டால்?

 • சண்டை போடுவது போல் கனவில் கண்டால் தன் உண்மையான நட்பிடமிருந்து நல்ல செய்திகள் வரும் என்பதை குறிக்கும்.

வெகுதூரத்தில் உள்ள நண்பர்களை கனவில் கண்டால்:

 • கனவு காண்பவர்களின் நட்புறவுக்கு உடல் நல குறைவு அல்லது ஏதோ பிரச்சனை வரும் என்பதையும் குறிக்கும்.

ஆண் நண்பன் பெண் தோழியை கனவில் கண்டால்?

 • கனவு காண்பவர் ஆண் நண்பனாக இருந்து அவர் கனவில் பெண் தோழியை கனவில் கண்டால் அந்த பெண் தோழியிடம் மேலும் நல்ல பரஸ்பர உறவு முறை கிடைக்கும் என்பதையும் உணர்த்தும்.

பழைய நண்பர்கள் கனவில் வந்தால்?

 • கனவில் பழைய நண்பர்களை கண்டால் அவரை அல்லது வேற ஒருவரை மிக விரைவில் பார்க்க போகிறிர்கள் என்று அர்த்தம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil