நீங்கள் போன் பயன்படுத்தும் முறையை வைத்து உங்களின் குணத்தை தெரிந்துகொள்ளலாம்

போன் பிடிக்கும் முறைகள்

வணக்கம் நண்பர்களே..! உங்களின் குணங்களை பற்றி தெரிந்துகொள்ள பல முறைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் இந்த பதிவு நீங்கள் போன்  பிடித்து பயன்படுத்தும் முறையை வைத்து எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக போனை கையாள்வார்கள். அதில் நீங்கள் கையாளும் முறையை வைத்து உங்களின் குணத்தை தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ உங்களுக்கு பிடித்த எண்ணை வைத்து உங்கள் குணத்தை தெரிந்து கொள்வோம்

போன் பிடிக்கும் முறை:1

phone personality test in tamil

நீங்கள் போனை இடது கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் உள்ள விரல்களால் போனை பயன்படுத்துபவராக இருந்தால் புத்தி கூர்மையுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களின் மீது அக்கறையாகவும், பாசமாகவும் இருப்பீர்கள்.  இவர்கள் இப்படி தான் என்று மற்றவர்களின் குணத்தை ஈஸியா கணித்துவிடுவீர்கள். மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். காதல் மற்றும் குடும்பம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

போன் பிடிக்கும் முறை:2

phone personality test in tamil

நீங்கள் ஒரே கைகளால் போனை பயன்படுத்துபவராக இருந்தால் சுதந்திரமாக இருப்பீர்கள். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை தக்க வைத்து இருப்பீர்கள். எதையும் அதிகமாக விரும்பமாட்டிர்கள். எதை நினைத்தும் வருந்தமாட்டடீர்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் கனவுகளை அடைவதற்கு எந்த எல்லைக்கும் செல்லுவீர்கள். வாழ்க்கையில் எதை பற்றியும் கவலை பட மாட்டீர்கள். வருவது வரட்டும். போவது போகட்டும் என்ற குணமுடையவராக இருப்பீர்கள்.

போன் பிடிக்கும் முறை:3

phone personality test in tamil

நீங்கள் போனை இரண்டு கைகளிலும் உள்ள கட்டை விரலை மட்டும் பயன்படுத்துபவராக  இருந்தால் ஒரு விஷயத்தை  சீக்கிரமாக முடிவு எடுத்து விடுவீர்கள். கடுமையான சூழல் வந்தாலும் ஈசியாக எதிர்கொள்வீர்கள். குழந்தைகளுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அமைதியான குணம் உள்ளவராக இருப்பீர்கள். நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுடன் கூட இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்திருப்பீர்கள்.

போன் பிடிக்கும் முறை:4

phone personality test in tamil

நீங்கள் போனை இடது கையால் பிடித்துக்கொண்டு வடது கையின் ஆள்க்காட்டி விரலால் பயன்படுத்துவராக இருந்தால் கற்பனை திறன் அதிகம் உள்ளவராக இருப்பீர்கள். உங்களின் பேச்சு திறமையால் மற்றவர்களை கட்டிபோடுவீர்கள். எந்த விஷயத்தையும் தெளிவாக முடிவு எடுப்பீர்கள். நீங்கள் கலைத்துறையில் வல்லமை படைத்தவர்களாக இருப்பீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்