இந்திய ரிசர்வ் வங்கியின் அசத்தலான பாசிட்டிவ் பெ சிஸ்டம் | Positive Pay System in Tamil

Advertisement

பாசிட்டிவ் பெ சிஸ்டம் | Positive Pay System RBI in Tamil

இன்றைய காலத்தில் தொழில்நுட்பங்கள் பல வகைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி நிலை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் சில தொழில்நுட்பங்கள் தேவையில்லாத செயல்களிலும் ஈடுபாடு செய்துள்ளார்கள். குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து வங்கி சேமிப்பு பணத்தை மோசடி செய்கிறார்கள். இது மாதிரியான பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கு தான் இந்திய ரிசர்வ் வங்கி பாசிட்டிவ் பெ சிஸ்டம் என்ற புதிய அறிமுகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்

Positive Pay System in Tamil:

போலியான காசோலைகளை தயாரிப்பது, அடுத்தவர்களுடைய சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தொகையினை எடுப்பதற்கு பல மோசடிகளை செய்வது இப்போதெல்லாம் மிக சாதாரணமாகிவிட்டது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதை மிக மிக பாதுகாப்பானதாக்க ரூ. 50,000/- க்கு மேல் உள்ள அனைத்து காசோலைகளுக்கும் Positive Pay என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

அதாவது அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையின் முறையே 20% மற்றும் 80% காசோலைகள் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையின் கீழ் வரும்.

What is Positive Pay System in Tamil:

Positive Pay என்றால் மோசடிகளை கண்டறிய உதவும் புதிய அம்சமாகும்.

இது காசோலை பணமாக மாற்றப்படுவதற்கு முன்னர் அதாவது encash செய்யப்படுவதற்கு முன்னர், அது தொடர்பான அனைத்து தகவல்களும் முதலில் சரிபார்க்கப்படும்.

அதாவது காசோலையை வழங்கிய நபர் வங்கியின் மொபைல் செயலியில் வழங்கப்பட்ட காசோலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார். அந்த தரவுகளில் எதாவது பொருத்தம் இல்லை என்றால் காசோலை வழங்கும் நபரை வங்கி தொடர்பு கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிட்டிவ் பெ சிஸ்டம்:

இந்த வழிமுறையை ICICI வங்கி பயன்படுத்துகிறது. ICICI வங்கி இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி காசோலையினை பயனாளிக்கு கொடுப்பதற்கு முன்பு வங்கியின் மொபைல் செயலியில் நீங்கள் காசோலை எண், தேதி, பணம் யார் செலுத்துகிறார்களோ அவர்களுடைய விபரம் உள்ளிட்ட தகவல்களுடன் காசோலையின் முன் மற்றும் பின் பக்கத்தின் புகைப்படங்களையும் பகிர வேண்டும்.

இதற்கு பின்பு பணம் செலுத்துபவர் காசோலையை டெபாசிட் செய்யும் போது ​​ ​Positive Pay மூலம், காசோலை மற்றும் வழங்கியவர் கொடுத்த தகவல் தொடர்பான விபரங்கள் சரி பார்க்கப்படும்.

குறிப்பாக காசோலை அளித்த நபர் வழங்கியுள்ள விபரங்களுக்கும், காசோலையின் விவரங்களும் ஒத்துப்போனால் மட்டுமே பயனாளிக்கு அந்த தொகை வழங்கப்படும். ஒருவேளை விவரங்கள் பொருந்தவில்லை என்றால் காசோலை வழங்கிய நபர் தொடர்பு கொள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement