இறாலை சாப்பிடுவதற்கு முன் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! | Prawn Information in Tamil 

Prawn information in tamil

Prawn in Tamil | இறால் பற்றிய தகவல்..!

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு நீர்வாழ் உயிரினம் பற்றிய சில தகவல்களை  தான் தெரிந்து கொள்ள போகின்றோம் . அது என்ன உயிரினம் என்றால் இறால் தான். இறாலில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கணிசமான அளவில் உள்ளது. அதனை சாப்பிடுவதால் நமது உடலுக்கு மிகுந்த சத்துக்கள் கிடைக்கிறது. இப்படி நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்ற இறால் பற்றிய விவரங்களை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Prawn Information in Tamil :

Prawn in tamil

இறால்(Prawn) என்பது நன்னீரில் மற்றும் கடல்நீரிலும் வாழக்கூடிய ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். பொதுவாக மனிதர்களால் விரும்பி சாப்பிடக்கூடிய இறைச்சியாக இந்த இறால் உள்ளது. மேலும் கடலில் வாழக்கூடிய பெரிய மீன்கள் மற்றும் திமிங்கலங்களுக்கு இது ஒரு நல்ல உணவாக உள்ளது.

இறால் பொதுவாக கூட்டம் கூட்டமாக வாழக்கூடியது. நீரில் பின்புறமாக நீந்தக்கூடியது. கடலில் வாழக்கூடிய உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரின் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவ்வாறு மாறக்கூடிய கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இந்த இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன.

அதனால் இந்த இறால் மீன்களை “கடலின் தூய்மையாளர்” என்று அழைப்பார்கள். நன்கு வளர்ச்சியடைந்த இறால் மீன்கள் ஆழ்கடல் பகுதியில் உள்ளன. இவைகள் ஆழ்கடல் பகுதியில் தான் இவைகளின் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளும் அங்கேயே முதிர்ச்சியடைகின்றன.

ஆனால் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்பட்டு சதுப்பு நிலக்காடுகளிலும் மற்றும் கடலோர கரைகளிலும் ஒதுங்குகின்றன. இந்த இடங்களில் தான் மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெறுவதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. அதனால் ஆழ்கடல் பகுதியில் உள்ள நன்கு வளர்ச்சியடைந்த இறால் மீன்களின் எண்ணிக்கையும் குறைகின்றது.

வகைகள்:

  1. பவள இறால்
  2. பாறை இறால்
  3. கல் இறால்
  4. மிதியடி இறால் என நன்கு வகைகள் உள்ளன.

ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் :

பொதுவாக மற்ற கடல் உணவுப் பொருட்களைப் போல் இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது.

இதில் உள்ள கொழுப்பானது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தமிழ் நாட்டில் பெரும்பாலும் இறாலை வறுத்து மற்றும் தொக்கு போல் செய்து உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இறால் குழம்பு மற்றும் இறால் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது.

இதையும் படியுங்கள்=> இறால் வளர்ப்பு தொழில்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil