ரவீந்திரநாத் தாகூர் வரலாறு | Rabindranath Tagore in Tamil

Rabindranath Tagore in Tamil

ரவீந்திரநாத் தாகூர் வரலாறு | Rabindranath Tagore History in Tamil

Rabindranath Tagore in Tamil: நம் நாட்டிற்கும், இலக்கியத்திற்கும் மிகப்பெரிய வரலாறு உண்டு. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவர். நம் நாட்டின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலை எழுதிய ஒரு அற்புத கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல இசைப் பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால்தடம் பதித்த அற்புத மாமனிதர் ஆவார். கவிதைக்காக நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாறை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

பிறப்பு – Rabindranath Tagore in Tamil:

Rabindranath Tagore history in Tamil

 • இவர் கல்கத்தாவில் மே மாதம் 7-ம் தேதி 1861-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் தேவேந்திரநாத் தாகூர், தாயார் பெயர் சாரதா தேவி. இளம் வயதிலேயே தாயார் இவரை விட்டு பிரிந்தார். தாயாரின் மறைவிற்கு பிறகு பணியாளர்களால் வளர்க்கப்பட்டார். இவருடைய குடும்பம் இலக்கிய நாளிதழ் வெளியிட்டு நிறுவனம் மற்றும் திரையரங்கம் போன்றவற்றை நடத்தி வந்தது.

இளமை – Rabindranath Tagore History – ரவீந்திரநாத் தாகூர் வரலாறு

 • பாரம்பரிய கல்வி முறையில் நாட்டம் இல்லாத தாகூர் அவர்கள் ஆசிரியர்களை வரவழைத்து வீட்டிலேயே கல்வி கற்க தொடங்கினார். பின் 14-ம் தேதி பிப்ரவரி மாதம் 1878-ம் ஆண்டு தந்தையுடன் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தின் மூலம் ரவீந்திரநாத் தாகூர் பல நிகழ்வுகளை தெரிந்து கொண்டார்.
 • வானியல், அறிவியல், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். இவர் கவிதை மேல் இருந்த பற்று காரணமாக தனது 8-வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். தனது கவிதைகளை பானுசிங்கோ என்ற பெயரில் 1877-ம் ஆண்டு வெளியிட்டார். 16-வயதில் சிறுகதைகளையும், நாடகங்களையும் எழுத தொடங்கினார். தனது 20-வது வயதில் “வால்மீகி பிரபிதா” எனும் முதல் நாடகத்தை எழுதினார்.

திருமணம் – ரவீந்திரநாத் தாகூர் வரலாறு தமிழ்:

 • டிசம்பர் மாதம் 9-ம் தேதி 1883-ல் மிருணாளினி என்பவரை மணந்தார். இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள். அதில் இரண்டு பிள்ளைகள் இறந்து விட்டன. 1902-ம் ஆண்டு அவரது மனைவி மிருணாளினி இறந்த பின்பு ஸ்மரன் என்ற கவிதையை மிருணாளினி அவர்களுக்கு சமர்ப்பித்தார்.

கவிதை உணர்வு – ரவீந்திரநாத் தாகூர் வரலாறு

 • 1878-ம் ஆண்டு லண்டனில் வழக்கறிஞர் படிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் shakespeare-ன் படைப்புகளில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால் 1890-ம் ஆண்டு பட்டம் பெறாமல் வங்கத்திற்கு திரும்பி சென்றார். அதன் பிறகு கதாசிரியராகவும், நாவலாசிரியராகவும் வாழ தொடங்கினார்.
 • 1884-ம் ஆண்டு கோரி-ஓ-கமல் என்ற கவிதையை எழுதினார். ராஜா-ஓ-ராணி, விஸர்ஜன் போன்ற நாடகங்களையும் இயற்றினார். வங்காள தேசத்தில் உள்ள ஷிலைடாஹா எனும் இடத்தில் 1890-ம் ஆண்டு ஒரு பண்ணையை நிறுவினார்.
 • சொனார் தொரி மற்றும் கனிகா எனும் ஏழு கவிதை தொகுப்பை 1893-1900 வரை எழுதினார். ஷிலைடாஹாவிலிருந்து சாந்தி நிகேதனுக்கு 1901-ம் ஆண்டு சென்று அங்கு ஒரு ஆசிரமத்தை நிறுவினார்.

நோபல் பரிசு – Rabindranath Tagore History in Tamil:

 • 1909-ம் ஆண்டு கீதாஞ்சலியை எழுத துவங்கினார். லண்டன் சென்ற போது கீதாஞ்சலியில் உள்ள பாடல்கள் மற்றும் கவிதைகளை 1912-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
 • லண்டனில் கீதாஞ்சலி அதிக வரவேற்பு பெற்றதால் அங்கு உள்ள இந்திய சமூகத்தில் வரையறுக்கப்பட்ட பதிப்பில் வெளியானது. அதற்கு ரவீந்திரநாத் தாகூர் முன்னுரை எழுதினார். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலிக்கு 1913-ம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசு கிடைத்தது. பின் வங்களத்தில் எழுதிய கவிதைகள் மற்றும் நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

தேசிய உணர்வு – ரவீந்திரநாத் தாகூர் வரலாறு:

 • கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க 1905-ம் ஆண்டு முடிவு செய்தார். இந்த முடிவை எதிர்த்து பல தேசிய பாடல்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டார்.
 • குழந்தை திருமணம், தீண்டாமை போன்றவற்றை ஒழிப்பதற்காக கவிதை எழுதினார். ஆங்கில அரசின் சார்பில் இவருக்கு 1915-ம் ஆண்டு ‘சர்’ பட்டமும் வழங்கப்பட்டு இருந்தது. 1919-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை அறிந்த ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலேய அரசின் அந்த சர் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
 • விஸ்வபாரதி எனும் பல்கலைக்கழகத்தை 1921-ம் ஆண்டு கட்டினார். இந்த பல்கலைக்கழகத்தை கட்டுவதற்கு மக்களிடம் பணம் வாங்காமல் நோபல் பரிசு மூலமாக வந்த உரிமைத் தொகை அனைத்தையும் இந்த பல்கலைக்கழகத்திற்காக செலவு செய்தார். தனது 60-வது வயதிலும் சோர்ந்து போகாமல் ஓவியங்கள் வரைந்து அதற்கு வண்ணம் தீட்ட தொடங்கினார்.

சிறப்புகள் – Rabindranath Tagore in Tamil:

 • Rabindranath Tagore Tamil: இலக்கியத்திற்காக முதல் நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 1940-ம் ஆண்டு இலக்கிய முனைவர் பட்டம் வழங்கியது. அவர் எழுதிய ஜன கண மன பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக உள்ளது.
 • இவர் இயற்றிய அமர் சொனார் என்ற பாடல் வங்காள தேசத்தின் தேசிய கீதமாக உள்ளது. 63-வயதில் பெரு நாடு மற்றும் மெக்ஸிகோவுக்கு சென்றார். இவரது நினைவாக இரு நாட்டு அரசுகளும் சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.

மறைவு – About Rabindranath Tagore in Tamil

 • தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கவிதை எழுதுவதற்காகவும், நாடகங்கள் இயற்றுவதற்காகவும் செலவிட்ட ரவீந்திரநாத் தாகூர் உடல் நல குறைவால் ஆகஸ்ட் 7-ம் தேதி 1941-ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil