தேன்கூடு இஞ்சி செடி பற்றிய தகவல்..!

shampoo ginger plant uses in tamil

தேன்கூடு இஞ்சி செடி பற்றிய தகவல்..!

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான தகவல் தான். அது என்னவென்றால் தேன்கூடு இஞ்சி செடி பற்றிய தகவல் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த தேன்கூடு இஞ்சி செடி பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் இந்த தேன்கூடு இஞ்சி செடியில் பல நன்மைகள் உள்ளன. அதனால் இந்த இஞ்சி செடி பற்றிய தகவல்களை இந்த பதிவில் விரிவாக காணலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

ஷாம்பு இஞ்சி செடி பற்றிய தகவல்:

shampoo ginger plant benefits in tamil

இன்றைய காலகட்டத்தில் இந்த தேன்கூடு இஞ்சி செடியை பல வீடுகளில் அழகுக்காக வளர்க்கிறார்கள். ஆனால் இந்த செடியில் பல நன்மைகள் உள்ளன.

வேறுபெயர் மற்றும் பிறப்பிடம்: 

தேன்கூடு இஞ்சி செடி(Zingiber zerumbet) என்பதற்கு அவுஹி, கசப்பான இஞ்சி, ஷாம்பு இஞ்சி மற்றும் பைங்கோன் இஞ்சி போன்ற வேறுபெயர்கள் உள்ளன. இந்த தேன்கூடு இஞ்சி செடி இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவர இனமாகும். இந்த செடி வெப்பமண்டல ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டது.

பண்புகள் :

இதன் இலை மற்றும் தண்டுகள் சுமார் 1.2 மீ (3.9 அடி) உயரம் வரை வளர கூடியவை. 10-12 கத்தி வடிவ இலைகள் 15-20 செ.மீ நீளமுள்ள மெல்லிய, நிமிர்ந்த தண்டுகள் மீது வளரும். இதன் இலை தண்டுகளில், கூம்பு அல்லது தேன்கூடு வடிவ மலர்கள் மலரும்.

பயன்கள்:

இதன் வேர்த்தண்டுக் கிழங்குகள் பல்வேறு உணவு வகைகளில் உணவு சுவையூட்டல் மற்றும் பசியைத் தூண்டும் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேர்த்தண்டுக் கிழங்குகளின் சாறுகள் மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

இது ஒரு வற்றாத தாவரமாகும். இந்த செடியில் உள்ள மலர்களில்  ஒரு வகையான திரவத்தை நமது தலைக்கு ஷாம்பூ போல் பயன்படுத்தலாம் அதனால் இதனை வற்றாத தாவரம் என்றும் ஷாம்பூ இஞ்சி என்றும் அழைப்பார்கள்.

ஆனால் இந்த செடியில் முதல் மலர் மலர்வதற்கு நட்டு வைத்து ஒருவருடத்திற்கு பிறகுதான் மலரும்.

இதையும் படியுங்கள் => இஞ்சியை யார் எல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil