தமிழ்நாடு என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா.?

tamil nadu peyar matram

தமிழ்நாடு பெயர் காரணம்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் எல்லோருக்கும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பதிவை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.  அதாவது நம் தமிழ்நாடு என்ற நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வர காரணம் என்னவென்று, யோசித்து பார்த்திருக்கீர்களா.?  அப்படி நீங்கள் யோசித்து இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் தமிழ்நாடு என்று பெயர் வர காரணம் என்னவென்றும்,  இந்த பெயர் எப்பொழுது தொடங்கப்பட்டது என்றும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.

தமிழ் வார்த்தைகள் 

தமிழ்நாடு என பெயர் வர காரணம்:

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு காரணம் என்னவென்றால், மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பேசுபவர்கள் அதிகமாகவே இருந்தார்கள். இதனால் மொழிகளை கொண்டு தனித்தனியாக மாநிலங்களும் பிரிக்கப்பட்டு இருந்தது. அப்பொழுது  தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் மெட்ராஸ் ஸ்டேட் என்று வைக்கப்பட்டது,  அப்பொழுது மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று “கண்டன் சங்கரலிங்கனார்” அவர்கள் உண்ணாவிரதம்  இருந்தார்.

சங்கரலிங்கனார் உயிர் தியாகங்கள்:

மதராசு மாநிலம் “மெட்ராஸ் ஸ்டேட்” என்று அழைக்கப்பட்ட நிலையில்  அதனை தாங்கிக்கொள்ள முடியாமல்  “தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி கண்டன் சங்கரலிங்கனார் அவர்கள் வீட்டில் முன்  உண்ணவிருத்தம் இருந்து வந்தார். பலரும் அவரை உண்ணாவிரதம் இருப்பதில் இருந்து தடுத்து வந்தாலும் அதை அவரை மறுத்துவிட்டு 76 நாட்கள்  தனது கோரிக்கையை நிறைவேற்ற  வேண்டும் என்று உண்ணாவிருத்தம் இருந்தார், இதனால் அவருடைய உடல் நிலை சரியில்லாமல் “1956” ஆம் ஆண்டு அக்டோபர் 13 தேதி உயிரிட்டார்.  கண்டன் சங்கரலிங்கனார் மறைவுக்கு பிறகு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று பல இயக்கங்களின் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது அந்த கோரிக்கைகள்  கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வர தொடங்கியது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள்:

1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்காக தனி மசோதா கொண்டுவரப்பட்டு, அவை பின்பு தள்ளுபடியும் செய்யப்பட்டது.

1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு’ என்ற பெயரை மெட்ராஸ்  மாநிலத்துக்கு சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவையும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் பிறகு அண்ணா ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு,  1967 ஆம் ஆண்டில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை “தமிழக அரசு”ஆக மாறியது. அதனை தொடர்ந்து  1968 ஆம் ஆண்டு ஜீலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள்  கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு 1968 நவம்பர் 23 ஆம் நாள்  தமிழ்நாடு பெயர் மாற்றம்  நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது.  அதை தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது.

 

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil