உலக சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி – Ulaga Sutru Sulal Dhinam Uruthi Mozhi
வணக்கம் நண்பர்களே ஆண்டுதோறும் ஜூன் 5 தேதி அன்று உலக சுற்றுச்சூழல் தினம் என்று ஒன்று கொண்டாடுவது ஏன் தெரியுமா? இந்த இயற்கையை பாதுகாப்பதற்கு தான். பூமி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் வேறு யாரும் அல்ல மனிதர்களாகிய நாம் தான். அப்படி நாம் என்ன செய்து விட்டோம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். மரங்களை வெட்டுவது, ஆடுகளை அழிப்பது, பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை அதிகளவு பயன்படுத்திவிட்டு நிலத்தில் தூக்கி எறிகிறோம் அது மண்ணில் மக்காமல் மண்ணையும் நாசம் செய்கிறது இது போன்று இயற்கைக்கு எதிராக நிறைய விஷயங்களை நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம் தினந்தோறும். இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியுமே முடியாதோ தெரியவில்லை. இருப்பினும் சுற்றுச்சூலை பாதுகாக்க வேண்டியும், உலக மக்கள் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவர்க்காகவும் ஐநாசபை 1972, ஜூன் 5-ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினம் என்று அறிவித்தது. சரி வரும் ஜூன் 5 தேதி முதலாவது நாம் பூமிக்காக சில உறுதிமொழிகளை எடுப்போம்.
World Environment Day Pledge in Tamil:
குப்பை:
கண்ட இடத்தில் குப்பையை வீச மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அருகில் குப்பைத் தொட்டி இல்லாவிட்டால் பேப்பர்களை உங்கள் கைப்பையில் சிறிது நேரம் வைத்திருப்பதில் தவறு இல்லை.
பிளாஸ்டிக்:
நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் பூமியில் மக்காமல் கிடக்கும் தன்மை உடையன. அதனால் இனி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்போம்.
மாசு:
கார், பைக்குகளை அதிக அளவில் பயன்படுத்தி காற்றை மாசுபடுத்த மாட்டோம் என உறுதிமொழிஎ டுப்போம். அருகில் உள்ள இடங்களுக்கு கால்நடையாகவோ அல்லது சைக்கிளிலோ செல்வது நம் உடல் நலத்திற்கும், பூமிக்கும் நல்லது.
நீர்:
தண்ணீரை வீணாக்குவதையும் நிறுத்திக் கொள்வோம். மழைநீரை சேகரிப்போம் என உறுதிமொழி எடுப்போம்.
மரங்கள்:
மரங்களை வெட்டிவிட்டு நிழல் தேடி அலையும் நாம் இனியாவது மரங்கள் நடுவோம். மரங்களை வெட்டுவதை முடிந்த அளவில் குறைத்துக் கொள்வோம். மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய மழையின் அளவும் குறையும் என்பதை நினைவில் கொள்க.
விலங்குகள், பறவைகள்:
அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளை அழிக்காமல் அவைகளின் மதிப்பை உணர்ந்து நடந்து கொள்வோம் என்று உலக சுற்றுச்சூழல் தினமான இன்று உறுதிமொழி எடுப்போம்..
அனைவருக்கும் இனிய உற்றுச்சூழல் தினம் நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்..!
உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை
மேலும் இது போன்று கட்டுரை பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Katturai in Tamil |