சாலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் ஏன் உள்ளன..? காரணம் தெரியுமா..?

Advertisement

Reason For Road Line Marking in Tamil

அன்பு நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கள் பொதுநலம்.காம் பதிவை படித்து பயன்பெறுங்கள்.

அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவில் சாலையில் போடப்பட்டிருக்கும் கோடுகளுக்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். நாம் சாலையில் செல்லும் போது அங்கு கோடுகள் போடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அதற்கு என்ன காரணம் என்று பல கேள்விகள் நம்மிடம் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ரயில் தண்டவாளத்தில் ஏன் கற்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

சாலையில் கோடுகள் போட காரணம் என்ன..? 

சாலையில் கோடுகள் போட காரணம் என்ன

சாலையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் கோடுகள் போடப்பட்டிருக்கும். அதுபோல சில கோடுகள் நீளமாகவும், சில கோடுகள் சிறிய அளவிலும் போடப்பட்டிருக்கும்.

சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக தான் இந்த கோடுகள் போடப்படுகின்றன. மேலும், நாம் சாலைகளில் எப்படி செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவும் இந்த கோடுகள் போடப்படுகின்றன.

 நீளமான வெள்ளை கோடு:

சாலையின் நடுவே எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல்  நீளமான வெள்ளை கோடு போடப்பட்டிருந்தால் அந்த சாலையில் வேகமாக செல்ல கூடாது.  அதேபோல அந்த சாலையில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல கூடாது என்று அர்த்தம்.

இடைவெளி விட்டு வெள்ளை கோடு:

அதேபோல சாலையில் வெள்ளை கோடுகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தால்  இடது புறமாக செல்லும் வாகன ஓட்டிகள், முன்னால் செல்லும் வாகனங்களை வலது புறம் கவனத்துடன் முந்தி செல்லலாம்  என்று அர்த்தம்.

அதேபோல அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என்றும் அர்த்தம்.

நீளமான மஞ்சள் கோடு: 

சாலையின் நடுவில்  ஒரு நீளமான மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் அது வெளிச்சம் குறைவான பகுதி என்றும் அதில் வேகமாக செல்லக் கூடாது என்றும் அர்த்தம் . அதேநேரம் அவசரம் என்றால் மட்டும் முன்னால் செல்லும் வாகனத்தை பாதுகாப்பாக முந்தி செல்லலாம் என்று அர்த்தம்.

2 நீளமான மஞ்சள் கோடுகள்: 

அதுபோல சாலையின் நடுவில்  2 நீளமான மஞ்சள் கோடுகள் போடப்பட்டு இருந்தால் அது ஆபத்தான பகுதி என்று அர்த்தம். அந்த சாலையில் முன்னால்  செல்லும் வாகனங்களை முந்தி செல்ல கூடாது என்பதை கூறுவதற்காக தான் 2 நீளமான மஞ்சள் கோடுகள் போடப்படுகின்றன.

சாலைகளில் மூன்று விளக்குகள் உணர்த்தும் செய்திகள் உங்களுக்கு தெரியுமா.?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement