Keyboard Letters in Tamil
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் பார்த்திருப்போம். அதை பயன்படுத்தியும் இருப்போம். ஆனால் நாம் கம்பியூட்டர் Keyboard -ல் இருக்கும் ஒரு விஷயத்தை கவனித்திருக்க மாட்டோம். அது என்ன விஷயம் என்று தானே யோசிக்கிறீர்கள். வாங்க நண்பர்களே இந்த பதிவை முழுமையாக படித்து அதை தெரிந்து கொள்வோம்.
Keyboard-ல ஏன் எழுத்துக்கள் வரிசையாக இல்லை காரணம் தெரியுமா..? |
F and J Keys On Keyboard in Tamil:
நாம் பயன்படுத்தும் Keyboard -ல் பல எழுத்துக்கள் இருக்கின்றன. அதில் இருக்கும் இருக்கும் எழுத்துக்களில் F மற்றும் J எழுத்துக்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா..? அதில் F மற்றும் J எழுத்துக்களின் அடியில் ஒரு சிறு கோடு போடப்பட்டிருக்கும்.
ஏன் மற்ற எழுத்துக்களில் மட்டும் இல்லாமல் இந்த 2 எழுத்துக்களில் மட்டும் கோடு இருக்கிறது என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கீ போர்ட்களில் இதுபோல F மற்றும் J எழுத்துக்களின் கீழ் கோடுகள் அச்சிடப்படவில்லை. அதன் பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து கீ போர்ட்களிலும் F மற்றும் J எழுத்துக்களின் கீழ் இந்த சிறு கோட்டை நாம் பார்க்க முடியும்.
இந்த F மற்றும் J தான் கீ போர்ட்டில் இருக்கும் மிகவும் முக்கியமான எழுத்துக்கள் ஆகும். இந்த 2 கோடுகளும் தான் கீ போர்ட்டில் வேகமாக ‘டைப்’ செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான வழி என்று சொல்லப்படுகிறது. இந்த முறையை ஜூன் இ. போட்டிச் ( June E. Botich ) என்பவர் தான் கண்டுபிடித்தார்.அதாவது, Keyboard டைப் செய்பவர்களை நாம் பார்த்திருப்போம். ஏன் நாம் கூட Keyboard -ல் டைப் செய்திருப்போம். சிலர் Keyboard -ல் இருக்கும் எழுத்துக்களை பார்த்து டைப் செய்வார்கள். சிலர் Keyboard -ஐ பார்க்காமலேயே டைப் செய்வார்கள்.
அப்படி Keyboard பார்க்காமல் டைப் செய்பவர்கள் தங்கள் கைகளை கீ போர்டில் சரியான இடத்தில் வைத்து கொள்ள உதவுவதே இந்த 2 எழுத்துக்கள் தான். அதனால் தான் இந்த F மற்றும் J எழுத்துக்களின் கீழ் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கீ போர்டில் அதிக நேரம் செலவு செய்வது குறையும். அதுமட்டுமில்லாமல் கண்களால் காண்பதை விட கைகளால் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
Power Button குறியீட்டுக்கு பின்னால் இருக்கும் கதை உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |