இடி இடிக்கும் போது டிவியில் switch மட்டும் ஆப் பண்ணால் மட்டும் போதுமா.!

Advertisement

இடி இடிக்கும் போது

இடி இடிக்கும் போது  ஒரு பயம் வரும். இடி இடிக்கும் போது எதை செய்கிறோமோ இல்லையோ அர்ஜுனா அர்ஜுனா என்று சொல்லுவோம். ஏன் இப்படி சொல்கிறோம் தெரியுமா.? தெரியவில்லை என்றால் இதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். இடி இடிக்கும் போது ஏன் “அர்ஜுனா” என்று சொல்கிறோம் காரணம் தெரியுமா..? பொதுவாக எல்லோரும் வீட்டிலும் சொல்வார்கள்  இடி இடிக்கும் போன் டிவி பயன்படுத்த கூடாது என்று கூறுவார்கள். அவ்வாறு ஏன் டிவி பயன்படுத்த கூடாது தெரியுமா.? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இடி இடிக்கும் போது ஏன் மூத்தப் பிள்ளை வெளியே செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள்..?

இடி இடிக்கும் போது ஏன் டிவி பயன்படுத்த கூடாது.?

பொதுவாக மின்னல் எப்போது வரும் என்றால் மழை தூறும் போது  அல்லது மழை வர மாதிரி இருந்தால் இடி இடிக்கும். அப்போது மின்னலின் போது தோராயமாக 30 கோடி வோல்ட்ஸ் பூமியை நோக்கி வருமாம் . மின்னல்  கீழே வரும் போது மின்சாரத்தை கடக்க கூடிய பொருட்களின் மீது விழும்.

மின்னல் வரும் போது போஸ்ட் மரத்தில் விழுகிறது என்றால் அந்த போஸ்ட் மரம் அந்த மின்னலை தாங்கி கொள்ள கூடிய அளவிற்கு வோல்ட்டேஜ் இருந்தால் பிரச்சனை இல்லை. அதுவே போஸ்ட் மரத்தால் தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு வோல்ட்டேஜ் வரும் போது பிரச்சனை ஏற்படும். இதனால் தான் இடி இடிக்கும் போது மின்சாரத்தை ஆப் பண்ணிடுவார்கள்.

இன்னொன்று இடி இடிக்கும் போது டிவியை ஆப் பண்ணுவோம். ஆனால் பிளக்கை ரிமூவ் செய்ய மாட்டோம். அதான் சுவிட்ச்யை ஆப் பண்ணிட்டோம் அப்பறம் என்ன என்று அலட்சியம் செய்வீர்கள். அதற்கான பதிலை இப்போது தெரிந்து கொள்வோம்.

பிளக் பாயிண்டில் உள்ள மூன்று ஓட்டைகளில் பெரிய ஓட்டையை எர்த் என்றும் கீழே இருக்கும் இரண்டு ஓட்டைகளை Phase மற்றொன்று Neutral என்று சொல்லுவோம்.  அடுத்து பிளக்குக்கு பக்கத்தில் ஸ்விட்ச் இருக்கும் அந்த ஸ்விட்ச்சானது Phase -க்கு மட்டும் தான் connection கொடுப்பட்டிற்கும். அதனால் தான் இடி இடிக்கும் போது மின்னல்கள் போஸ்ட் மரத்தில் விழும் போது நேரடியாக நமது பிளக்கிற்கு செல்லும். அதனால் தான் இடி இடிக்கும் டீவியை பயன்படுத்தாதீர்கள் என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இடி, மின்னல் வரும்போது நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information 

 

Advertisement