ஸ்மார்ட்போன் பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள் அவர்களது பாதுகாப்புக்காக பின், பாஸ்வேர்டு அல்லது பேட்டன் மூலம் லாக் செய்து வைத்துருப்பார்கள்.
இதனால் ஸ்மார்ட்போன் உரிமையாளரை தவிர, மற்றவர்கள் முறையான அனுமதி இன்றி ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியாது.
ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களது பாதுகாப்புக்காக கடினமான பாஸ்வேர்டு பயன்படுத்துவார்கள்.
இருப்பினும் சில சமயங்களில் கடினமான பாஸ்வேர்டுகள் மிக எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டால் அல்லது உங்களது பாஸ்வேர்டு மறந்துகூட போகலாம்.
இது போன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டால், அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தொடர்ந்துப் பார்ப்போம்.
வழிமுறை 1:
ஆன்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் பயன்படுத்துவது:
- முதலில் ‘https://myaccount.google.com/find-your-phone-guide on your PC or phone என்ற வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும்.
- இனி, உங்களின் கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும்.
- இதே கணக்கு உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
- லாக்-இன் செய்யப்பட்டதும், நீங்கள் அன்லாக் செய்ய வேண்டிய சாதனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்த திரையில் தோன்றும் ‘Lock your phone’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.இம்முறை, புதிய பாஸ்வேர்டினை பதிவு செய்ய வேண்டும்.
- இது உங்களின் பழைய பின், பேட்டன் அல்லது பாஸ்வேர்டுக்கு மாற்றாக இருக்கும்.இனி லாக் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- ஸ்மார்ட்போனில் உங்களது புதிய பாஸ்வேர்டு பதிவு செய்து, அன்லாக் செய்யலாம்.
வழிமுறை 2:
‘Ok Google’ வாய்ஸ் மேட்ச் பயன்படுத்தலாம்
கூகுள் அசிஸ்டண்ட் சேவையை சரியாக செட்டப் செய்திருந்தால், ‘Unlock with voice’ ஆப்ஷனை நிச்சயம் பார்த்திருக்க முடியும்.
இந்த அம்சம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் வேலை செய்யும். இந்த அம்சம் ஆன் செய்யப்பட்டு இருந்தால், ‘Ok Google’ என்று மட்டும் கூறி ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யலாம்.
வழிமுறை 3:
சாம்சங் பயனர்களுக்கு:
சாம்சங் அக்கவுண்ட்டில் சின்க் செய்யப்பட்டிருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்:
- முதலில் ‘https://findmymobile.samsung.com/’ வலைத்தளம் சென்று லாக் இன் செய்ய வேண்டும்.
- அடுத்து ‘Unlock’ ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் அக்கவுன்ட் பாஸ்வேர்டினை உறுதி செய்ய வேண்டும். இனி உங்களின் ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யப்பட்டு விடும்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.