மறந்து வைத்த உங்களுடைய போனை கை தட்டி கண்டுபிடிப்பது எப்படி..?

Advertisement

Clap To Find Your Phone in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் நம்முடைய மொபைலை மறந்து எங்காவது வைத்து விட்டால் என்ன செய்வோம். வேற மொபைலில் இருந்து கால் செய்து அந்த மொபைல் போனை கண்டு பிடிப்போம். ஆனால் இனி அப்படி செய்ய தேவையில்லை. உங்கள் மொபைலை கை தட்டி கண்டு பிடிக்கலாம். அது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். இன்று இந்த பதிவின் மூலம் நீங்கள் மறந்து வைத்த மொபைலை கைத் தட்டி கண்டு பிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் மொபைலில் Sound கம்மியா இருக்கா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க

மறந்து வைத்த போனை கைகளைத் தட்டி கண்டுபிடிப்பது எப்படி..? 

Clap To Find Your Phone in Tamil

Step -1 

முதலில் உங்களுடைய போன் Play Store -ல் Clap To Find என்ற ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள்.

Step -2

பின் அந்த ஆப்பை ஓபன் செய்யுங்கள். அதில் Clap To Start என்று காட்டும். அதில் 3 முறை உங்கள் கைகளை தட்டி சத்தம் கொடுங்கள். பின் அதில் Ok என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்பொழுது நீங்கள் கை தட்டும் போது உங்கள் போன் சத்தம் எழுப்பும்.

Step -3 

Sound, Vibrate, Flash

பின் அந்த App -ல் உள்ள Settings உள்ளே செல்லுங்கள். அதில் Sound, Vibrate, Flash என்று 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் உங்களுக்கு எந்த ஆப்சன் வேண்டுமோ அதை நீங்கள் கிளிக் செய்து கொள்ளலாம். அதுபோல அதில் 3 ஆப்சனும் வேண்டும் என்றாலும் நீங்கள் கிளிக் செய்து கொள்ளலாம்.

Step -4

பின் அதில் Alert Settings என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களுக்கு எந்த Ringtone வேண்டுமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

Step -5

Sensitivity Volume

பிறகு அதன் கீழே Sensitivity என்ற ஆப்சன் இருக்கும். அதில் இருக்கும் Volume குறைவாக வைத்து கொள்ளுங்கள். காரணம், அந்த Volume அதிகமாக இருந்தால் சின்ன சத்தம் கேட்டால் கூட உங்களுடைய போன் சத்தம் எழுப்பும். அதனால் இந்த Sensitivity Volume குறைவாக வைத்து கொள்ளுங்கள்.

குறிப்பாக உங்களுடைய போன் Silent -ல் இருந்தால் கூட இதன் மூலம் நீங்கள் கைத் தட்டும் போது போன் சத்தம் எழுப்பும்.

குறிப்பு: இந்த Clap To Find ஆண்ட்ராய்டு ஆஃப் டவுன்லோட் செய்வதற்கு முன் அதில் இருக்கும் Review பார்த்து கொள்வது நல்லது. அதுபோல இந்த Clap To Find App டவுன்லோட் செய்வது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.

 

மொபைலில் Airplane Mode-லையும் நெட் யூஸ் பண்ணலாம் அது எப்படி தெரியுமா?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement