மொபைலில் Airplane Mode-லையும் நெட் யூஸ் பண்ணலாம் அது எப்படி தெரியுமா?

Advertisement

How to Use Internet on Flight Mode in Tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக நாம் நமது மொபைலில் Airplane Mode ஆன் செய்தோம் செய்தோம் என்றால், பின் நமது மொபைல் டேட்டா off ஆகிவிடும். யாரையும் நம்மால் மொபையில் மூலம் தொடர்புகொள்ள முடியாது. அதேபோல் யூடியூபில் வீடியோ கூட பார்க்க முடியாது.. ஆனால் நீங்கள் இந்த ட்ரிக்ஸை Follow செய்தீர்கள் என்றால். உங்களால் யூடியூபில் வீடியோ பார்க்க முடியும். குறிப்பாக உங்களுக்கு எந்த ஒரு போனும் வராது. நீங்கள் எந்த ஒரு தொல்லையும் இல்லமால் யூடியூபில் விடியோஸ் பார்க்க முடியும் அதுவும் Airplane Mode ஆன் செய்து. அது எப்படி என்பதை பற்றி இப்பொழுது நாம் தெளிவாக பார்க்கலாம் வாங்க

மொபைல் நெட் ஆன் செய்யாமல் பிளைட் மோடில் நெட் பயன்படுத்த முடியும்:

🟪 முதலில் உங்கள் மொபையிலில் Airplane Mode-ஐ On செய்து கொள்ளுங்கள்.

🟪 பின் உங்கள் தொலைபேசியின் டயலரைத் திறந்துகொள்ளுங்கள்.

🟪 பிறகு *#*#4636#*#* குறியீட்டு எண்ணை டயல் செய்யவும்.

How to use Internet in Flight Mode

🟪 இப்பொழுது மேல் படத்தில் உள்ளது போல் ஒரு பக்கம் திறக்கப்படும். அவற்றில் Phone Information 1 என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

🟪 பிறகு Phone Info 1 என்ற ஒரு பக்கம் திறக்க படும் அந்த பக்கத்தை ஸ்கிரால் செய்து கொள்ளுங்கள். அதாவது அந்த பக்கத்தில் Mobile Radio Power என்ற ஆப்சன் இருக்கும். அந்த ஆப்சன் off என்று இருக்கும். ஆக நீங்கள் அதனை On செய்து கொள்ளுங்கள்.

🟪 அவ்வளவு தான் இப்பொழுது நீங்கள் வீடியோ பார்க்க முடியும், சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியும். ஆனால் உங்களுக்கு எந்த ஒரு அழைப்பும் போனில் வராது. ஒரு வேலை நீங்கள் Flight-யில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தலாம். மேலும் ஏதாவது யூடியூபில் வீடியோ பார்க்கும்போது உங்களுக்கு Phone-யில் எந்த ஒரு Calls-ம் வரக்கூடாது தொலையின்றி, யூடியூபில் வீடியோ பார்க்க வேண்டும் என்றாலும் இந்த ட்ரிக்ஸை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் படியுங்கள் 👉👉 3 புதிய WhatsApp Privacy அம்சங்கள் அறிமுகம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips in Tamil
Advertisement