Google App in Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். Google ஆப் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இந்த உலகில் நடக்கும் அனைத்து தகவல்களையும் நமக்கு கேட்டவுடன் தரும் ஒரு செயலியாக Google செயல்பட்டு வருகிறது.
Google ஆப்பில் கிடைக்காத தகவல்களே கிடையாது. அதுபோல Google ஆப் எப்படி உருவானது. அது எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் Google ஆப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Google App Information in Tamil: கொரிய
Google என்பது தமிழில் தேடுபொறி தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் என்று சொல்லப்படுகிறது.
இந்த Google நிறுவனமானது இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை மற்றும் இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறது.
இந்த Google நிறுவனமானது கலிபோர்னியா நாட்டில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் லாரி பேஜ் (Larry Page) மற்றும் சேர்ஜி பிரின் (Sergey Brin) என்ற PhD மாணவர்களால் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
Google Play Store ஆப் பற்றி இவ்வளவு தகவல்கள் இருக்கா..? |
இந்நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் ஆரம்ப பொது வழங்கல் (IPO) மூலம் பொது மக்களுக்குச் சென்றடைந்தது. அதுபோல இந்த நிறுவனம் 2015 ஆம் ஆண்டில், Alphabet Inc என்ற நிறுவனத்தின் முழு உரிமையாளராக கூகுள் நிறுவனமானது மறுசீரமைக்கப்பட்டது.
அதுபோல கூகுள் Alphabet நிறுவனத்தின் மிகப்பெரிய துணை நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சுந்தர் பிச்சை அவர்கள் Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதாவது ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த லாரி பேஜு என்பவருக்கு பதிலாக சுந்தர் பிச்சை அவர்கள் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.உங்க போனில் Google Map இருக்கா..? அப்போ இந்த Tricks பற்றி தெரிஞ்சிக்கோங்க..! |
கூகுளின் வளர்ச்சி:
இந்த Google நிறுவனம் கூகுள் தேடல் மூலம் ஏராளமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க என்ற நோக்கத்தில் செயல்பட்டு நல்ல வளர்ச்சியும் கண்டது.
உலகம் முழுதும், ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களை இந்நிறுவனம் கொண்டிருந்தது. அதுபோல இது ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், 24 பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
Google -ன் வேகமான வளர்ச்சியின் காரணமாக இந்நிறுவனம் பல புதிய மென்பொருள் சேவைகளை வழங்கியது. அதுபோல Google இணையத்தில் தேடும் தகவல்களை பெறும் பயன்பாடு அக்டோபர் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அதுபோல Google இணையத் தேடலுடன் Google Mail, Google Docs, Google Plus, Google Docs, Google Maps, Google News, Blogger, YouTube போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்கியது.
மேலும், Google Chrome, Google Meet, Google Contacts, Google Messages, Google Photos, Google Drive, Google Files, Google Sheets, Google Keyboard, Google Translate போன்ற பல சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கியது. இதன் மூலம் நல்ல வெற்றியும் கண்டது. அதுபோல இன்றைய நிலையிலும் Google -ன் வளர்ச்சி அதிகரித்து கொண்டு செல்கிறது.
Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |