How to Apply My Scheme in Tamil
பெரும்பாலும் அரசு அறிவிக்கும் திட்டத்தை பற்றி அதிகளவு யாருக்கும் தெரிவதில்லை. சிலருக்கு சில திட்டம் இருக்கும் என்பதே தெரியவில்லை. அரசு அறிவிக்கும் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள தினமும் அரசு அலுவலகம் வங்கி அலுவலகம் என்று சென்று கொண்டு தான் இருக்கவேண்டும். ஆனால் இதற்கு அலுப்புபட்டுக் கொண்டு யாரும் எந்த வித திட்டத்தின் பலனை பெறுவதில்லை.
அப்படியே தெரிந்தாலும் அதற்கு அப்ளை செய்து கடைசி நேரத்தில் நீங்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது என்பார்கள். தகுதி இல்லை என்பது முன்பு தெரிந்தால் வேறு இடத்தில் லோன் கேட்டிருப்போம் என்று சொல்வார்கள். இனி கவலை இல்லை உங்களுக்காக அரசே ஒரு இணையதளத்தை உருவாகியுள்ளது. அதில் உங்கள் தகுதியை கொடுத்தால் அதுவே உங்களுக்கு தகுதி உள்ள திட்டத்தை பற்றி சொல்லும். அது எப்படி என்பதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
How to Apply My Scheme in Tamil:
ஸ்டேப்: 1
My Scheme Gov In என்பதை Type செய்து அதனுள் செல்லவும்.
ஸ்டேப்: 2
அதில் Find Schemes For You என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 3
அடுத்து அதில் Male, Female என்ற 3 ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்துவிட்டு கீழ் உங்கள் வயது கேட்கும் அதனையும் கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 4
அடுத்து திருமணம் ஆனவரா என்று 5 ஆப்சன் கேட்கும். அதையும் கிளிக் செய்து விட்டு Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்: 5
அடுத்து நீங்கள் என்ன மாநிலம் என்று கேட்கும் அதனையும் கிளிக் செய்யவும். அதற்கு கீழ் நகரமா, அல்லது கிராமமா என்று கேட்கும். அதற்கும் சரியாக கிளிக் செய்து Next என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 6
அடுத்து உங்களுக்கு ஒரு திரை காணப்படும். அதில் உங்கள் சாதி கேட்கும் அதனையும் கிளிக் செய்யவும். அதில் நீங்கள் மாற்றுத்திறனாளியா என்று கேட்கும் அதில் Yes என்றால் Yes கொடுக்கலாம். இல்லை என்றால் No என்று கொடுக்க வேண்டும்.
ஸ்டேப்: 7
அடுத்து நீங்கள் 18 வயது நிரப்பியவரா இல்லையா என்று கேட்கும். அதையும் கிளிக் செய்து Next என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 8
அடுத்து நீங்கள் பள்ளி பயிலும் மாணவாரா என்று கேட்கும். அதற்கு பதில் கொடுக்கவும். அடுத்து நீங்கள் வேலை செய்பவர் என்றால் அதற்கும் பதில் கொடுக்கவும்.
நீங்கள் அரசு வேலை செய்பவரா என்று கேட்கும் அதற்கும் பதில் கொடுக்கவும். பின்பு Next என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 9
அடுத்து புதிதாக ஒரு திரை காணப்படும். அதில் நீங்கள் வேலை பார்ப்பதை கிளிக் செய்யவும்.
அதற்கு கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவரா என்று கேட்கும் Yes and No என்பதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யவும்.
அடுத்து நீங்கள் ஏதாவது துயரத்தில் உள்ளீர்களா என்று கேட்கும் அதற்கு பதில் அளித்து Next என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 10
அடுத்து உங்களுக்கு எந்த திட்டத்தில் தகுதி இருக்கிறதோ அந்த திட்டம் காணப்படும். அதில் உங்களுக்கு எது தகுதி உள்ளதோ அதனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் Rs.1,51,450/- வட்டியாக பெறலாம் அருமையான முதலீட்டு திட்டம்..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ஆண்டில் 14 லட்சம் பெரும் தபால் துறை சேமிப்பு திட்டம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |