ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்ய டிப்ஸ்?
How to change address in aadhar card in tamil:- உங்களுடைய ஆதார் கார்டில் உங்கள் முகவரியை மாற்றம் செய்ய வேண்டுமா..? ஆனால் அது எப்படி என்று தெரியவில்லையே..? இனி இந்த கவலைய விடுங்கள். 2 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் கார்ட் முகவரியை uidai.gov.in என்ற இணையதளம் மூலமாக வீட்டில் இருந்தபடியே, மொபைலில் மாற்றலாம். அதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க…
TNEB Digital Meter Reading பார்ப்பது எப்படி? தெரிஞ்சிக்கலாம் வாங்க |
ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் உங்களுடைய முகவரியை மாற்றம் செய்வதற்கு தேவைப்படுபவை.
உங்களுடைய ஆதார் கார்ட் நம்பர்.
உங்களுடைய ஆதார் கார்ட் ரெஜிஸ்ட்ர் செய்த மொபையில் நம்பர் தேவைப்படும். இந்த நம்பருக்கு ஒரு OTP நம்பர் அனுப்பப்படும், எனவே இந்த மொபையில் நம்பர் இல்லை என்றால் கண்டிப்பாக ஆன்லைன் மூலன் உங்களுடைய ஆதார் கார்டில் முகவரியை மாற்ற முடியாது.
எந்த முகவரிக்கு உங்களுடைய ஆதார் கார்ட் முகவரியை மாற்றம் செய்ய உள்ளீர்களோ, அந்த முகவரிக்கு ஒரு அட்ரஸ் புரூப் அப்ளோட் செய்ய வேண்டும். அதாவது அந்த அட்ரஸ் புரூபை ஸ்கென் செய்து 2mb-க்கு குறைவாக உள்ளவாறு கம்ப்ரஸ் (Compress) செய்து வைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் அப்ளோட் செய்த அட்ரஸ் புரூபிள் (Address Proof) உங்களுடைய பெயர் மற்றும் கையொப்பம் இட்டு ஸ்கென் செய்திருக்க வேண்டும்.
Passport online-யில் அப்ளை செய்வது எப்படி? (How to apply passport online in tamil) |
ஆன்லைனில் ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றம் செய்வது எப்படி:
How to Change Address in Aadhar Card Online in Tamil Step: 1
முதலில் உங்கள் சிஸ்டம் அல்லது மொபைலில் ப்ரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள். அவற்றில் UIDAI என்று டைப் செய்யுங்கள். இப்பொழுது uidai.gov.in என்ற இணையதளத்தின் வெப்சைட் முதலாவதாகக் காட்டப்படும், அவற்றை கிளிக் செயுங்கள்.
How to Change Address in Aadhar Card in Tamilnadu Online Step: 2
Update Aadhaar என்ற ஆப்சன் காட்டப்படும். அவற்றின் கீழ் Update your address online என்ற ஆப்சன் காட்டப்படும் அவற்றை கிளிக் செய்ய வேண்டும்.
aadhar card address change in tamilnadu : இப்பொழுது மற்றொரு page திறக்கட்டும் அவற்றில், Update your address online என்பதற்கு, கீழ் Proceed to update address என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்பு மற்றொரு page திறக்கப்படும் அவற்றில் உங்களுடைய ஆதார் கார்ட் நம்பரை டைப் செய்யுங்கள். பின்பு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code–ஐ டைப் செய்யுங்கள்.
பின்பு Send to OTP என்பதை கிளிக் செய்யுங்கள். அதன்பிறகு உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு OTP நம்பர் அனுப்பப்படும்.
அவற்றை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய ஆதார் கார்ட் லாகின் செய்யப்படும்.
How to Change Address in Aadhar Card in Tamil Step: 3
இப்பொழுது மற்றொரு page திறக்கப்படும் அவற்றில் Update Address Via Address Proof என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அவற்றில் உங்களுடைய பழைய முகவரி காட்டப்படும். அதற்கு கீழ் Allow UIDAI to do local language translation of your address என்ற இடத்தில் கிளிக் செய்யப்பட்டிருக்கும். அந்த கிளிக்கை அன்கிளிக் செய்யுங்கள்.
பின் அந்த பகுதியில் உங்களுடைய விவரங்களை டைப் செய்ய வேண்டும். அதாவது உங்களுடைய பெயர், தந்தையின் பெயர், விலாச எண், மாவட்டம், தாலுகா, பின் கோடு போன்ற விவரங்களை டைப் செய்யுங்கள்.
Aadhar Card Address Change Tamil: 5
ஆங்கிலத்தில் டைப் செய்த விவரங்கள் அவற்றின் எதிர் புறத்தில் தமிழ் மொழியில் Translation செய்யப்படும். எனவே தமிழில் உங்களுடைய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் ஒரு முறை சரி பார்த்து கொள்ளுங்கள்.
பின்பு அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு பிரிவியூ (preview) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது..! |
How to Change Address in Aadhar Card Online Step: 6
இப்பொழுது மற்றொரு page திறக்கட்டும் அவற்றில் உங்களுடைய முகவரி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும், அவற்றில் முகவரியின் விவரங்களை ஒருமுறை சரிபார்த்த பின்பு. அவற்றில் கீழ் ஒரு டிக் பாக்ஸ் இருக்கும் அவற்றை கிளிக் செய்த பின்பு submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்பு மற்றொரு page திறக்கப்படும் அவற்றில் உங்களுடைய புதிய அட்ரஸ் புரூபை தேர்வு செய்து அப்ளோட் செய்து கொள்ளுங்கள்.
பின்பு submit என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவு தான் உங்களுடைய ஆதார் கார்ட் 2 வாரங்களில் ஆன்லைனில் அப்டேட் செய்யப்படும். அதன்பிறகு உங்களுடைய புதிய ஆதார் கார்டை நீங்கள் அப்ளை செய்தால். இப்போது அப்டேட் செய்யப்பட்ட முகவரிக்கு உங்களுடைய ஆதார் கார்ட் ரிஸீவ் ஆகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தொழில்நுட்ப செய்திகள் |