உங்களது போனை ஹேக் செய்திருக்கிறார்கள் என்பதை இதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்..!

How to find out if a phone is hacked in tamil

போன் ஹேக்

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் போன் பயன்படுத்துகின்றனர். ஆனால் நீங்கள் அப்படி பயன்படுத்தும் போது உங்களது போன் ஹேக் ஆகிருக்கா என்று தெரிந்து கொள்ள முடியுமா.? போன் மற்றும் Computer போன்றவையிலுருந்து ஈசியாக ஹேக் செய்கிறார்கள். உங்களது போன் ஹேக் ஆகிருக்கா என்பதை கண்டறிய நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம், எந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்த படியே உங்களது போனை ஹேக் செய்திருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். வாங்க எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

போன் ஹேக் செய்துருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி.?

உங்களது போன் வாங்கிய பிறகு பயன்படுத்திய போதெல்லாம் ஹீட் ஆகாமல் திடீரென்று ஹீட் ஆகிறது என்றால் உங்களது போனை யாரோ ஹேக் செய்கிறார்கள் என்று அர்த்தம்.

நீங்கள் போன் பேசிக்கொண்டிருக்கும் போது எப்பொழுதும் போல் இல்லாமல் போனில் ஏதோ ஒரு Disturbing இருந்தால் உங்ககளது போனை யாரோ பயன்படுத்துகிறார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ மொபைல் போன் நீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையா..!

உங்களது போன் வாங்கிய கொஞ்ச நாள் நல்லா பாஸ்ட் ஆக ஒர்க் ஆகிறது என்றால் பிரச்சனை இல்லை. அதுவே உங்களது போன் ஸ்லோவா ஒர்க் ஆகிறது என்றால் உங்களது போன் ஹேக் ஆகிருக்கிறது.

நீங்கள் போன் பயன்படுத்தும் போது தேவையில்லாத விளம்பரங்கள் மற்றும் பார்க்கும் பொழுது விளம்பரங்கள் வந்து கொண்டே இருந்தால் போன் ஹேக் ஆகிருக்கிறது.

உங்களது போனில் பயன்படுத்தும் விதத்தை வைத்து Data குறைந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் நீங்கள் போனை பயன்படுத்தாத போது Data குறைந்தால் உங்களது போனை யாரோ பயன்படுத்துகிறார்கள்.

ஹேக் செய்ததை சரி செய்வது எப்படி.?

முதலில் உங்களது போனில் நீங்கள் எந்தவொரு ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் புதிதாக ஆப் ஏதும் இன்ஸ்டால் ஆக்கிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்படி உங்களது போனில் தேவையில்லாமல் ஆப் ஏதும் இருந்தால் Delete செய்யுங்கள். 

மேலும் உங்களது போனில் பயன்படுத்தும் வாட்சப்பிலுருந்து வரும் லிங்க் எதையும் கிளிக் செய்யாதீர்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் போனில் ஏதவாது பார்த்து கொண்டிருக்கும் போது தேவையில்லாமல் Add வந்தால் அதை கிளிக் செய்யாதீர்கள்.

அடுத்து மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்தாலும் உங்களது போன் ஹேக் ஆகின்ற மாதிரி இருக்கிறது அப்படியென்றால் உங்களது போனில் இருக்கும் Data அனைத்தையும் copy செய்து கொள்ளுங்கள்.

 அடுத்து உங்களது போனை Reset செய்யுங்கள். இப்படி Reset செய்யும் பொழுது உங்களது போனில் இருக்கும் தேவையில்லாத அனைத்தும் Delete ஆகி உங்களது புதிதாக வாங்கிய போது எப்படி இருந்ததோ அப்படி இருக்கும்.  

இதையும் படியுங்கள் ⇒  வாட்ஸ்அப் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படுவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News