எந்த விதமான ஆப்பும் ஏற்றாமல் வாட்ஸ் அப் டிபி போட்டோவை தெரிந்தவர்களுக்கு மட்டும் காட்டும் படி வைக்கலாம்

Advertisement

Whatsapp Dp Privacy New Update in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் எல்லோருக்கும் பயனுள்ள ஒரு தகவலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பெரும்பாலும் அதிகமாக எல்லோரும் உபயோகப்படுத்தக்கூடிய ஒரு ஆப் என்றால் வாட்ஸ்அப் தான். இவை எல்லாருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முந்தைய காலகட்டத்தில் ஆண்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது கடிதங்கள் மூலம் அவர்களின் நலத்தையும், கவலைகளையும்  தெரிவித்து கொண்டு இருப்பார்கள்.

ஆனால் இப்பொழுது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு எந்தவித கவலைகளும் இல்லாமல் சென்று வாட்சப் மூலம் முகம் பார்த்து பேசும் அளவிற்கு வீடியோ கால்களும் வந்துவிட்டது. வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் புது புது பிரைவசி கண்டு பிடித்து வந்தாலும். அதில் நாம் தெரிந்துகொள்ளப்போகின்ற  பிரைவசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்களுடைய டிபியை உங்களுக்கு பிடித்தவருக்கு மட்டும் காட்டலாம். அவை எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?

உங்களுடியை டிபியை தெரிந்தவர்களுக்கு மட்டும் காட்டுவது எப்படி.?

நீங்கள் உபயோகப்படுத்தும் வாட்சப் ஆப்பிள் உங்களுடைய டிபியை  பிரைவசியாக  வைப்பதற்கு Setting ஆப்ஷனை கிளிக் செய்து Profile Photo -வை கிளிக் செய்து அதில் Everyone , My Contacts, Nobody  என்று இருக்கும்.

  • இதில் நீங்கள் Everyone  என்றால் எல்லோருக்கும் DP காட்டுவது போல வைப்பது.
  • My Contacts என்றால் உங்களுடைய DP நீங்கள் SAVE செய்து வைத்திருக்கும் நம்பர்களுக்கு மட்டும் காட்டும்.
  • Nobody  என்றால் உங்களுடைய DP  யாருக்கும் காட்டாதது போல செய்வது.
  • இதில் இருக்கும் ஆப்ஷன்களை வைத்து தான் நம்மளுடைய DP யை வைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது உங்களுடைய வாட்ஸ் ஆப்பை  உங்களுக்கு பிடித்தவருக்கு மட்டும் டிபியை வைக்கலாம்.
  • மேலும் அந்த புதிய Update என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Normal Whatsapp Dp Privacy in Tamil:

ஸ்டேப்:1

 normal whatsapp dp privacy in tamil

முதலில் உங்களுடைய வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு Search 🔎 க்கு பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து கொள்ளவேண்டும்.

ஸ்டேப்:2

 normal whatsapp dp privacy in tamil

மூன்று புள்ளிகளை கிளிக் செய்ததும் Account, Chats, Notification, Storage and Data, App language, Help, Invite a Frd  என்று ஒரு பேஜ் இருக்கும். அதில் முதலில் இருக்கும் Account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்:3

 normal whatsapp dp privacy in tamil

Account என்பதை கிளிக் செய்ததும் Privacy என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.  Privacy –யை கிளிக் செய்ததும் Profile photo என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்:4

 normal whatsapp dp privacy in tamil

Profile photo என்பதை கிளிக் செய்ததும் ஒரு பேஜ் ஓபன் ஆகும். அதில் My contacts except என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் நீங்கள் யாருக்கு DP  காட்ட கூடாது என்று நினைக்கிறீர்களோ அவர்களை மட்டும் Select செய்து கீழ் இருக்கும் Green கலரை டிக் செய்யுங்கள்.

இப்பொழுது நீங்கள் நினைத்தது போல் உங்களுடைய DP –யை மறைக்க முடியும், எனவே நீங்களும் இந்த ட்ரிக்கை பயன்படுத்தி பாருங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!

 

Advertisement