உங்கள் போட்டோவை WhatsApp Sticker ஆக மாற்றுவது எப்படி?

Advertisement

உங்கள் போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டிக்கராக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்க..!

How To Create Own Whatsapp Sticker In Tamil:- அனைவருக்கும் வணக்கம் உலகில் உள்ள முன்னணி சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் செயலி பயனர்களிடத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் செயலி என்றால் அது வாட்ஸ்அப் செயலிதான். இந்த வாட்ஸ்அப் செயலிக்கு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணமாகவே இருக்கின்றனர். அந்த வகையில் தங்களுக்காக புதிய ஆப்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதாவது தங்களுடைய புகைப்படத்தை ஸ்டிக்கராக உருவாக்கலாம். சரி வாங்க நம்ம போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டிக்கராக ஆக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

சிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..!

How to Make Own Photo Stickers in Whatsapp in Tamil..!

How To Create Own Whatsapp Sticker In Tamil – ஸ்டேப்: 1

முதலில் Google Play Store-க்கு செல்லுங்கள் அவற்றில் Sticker Maker என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 2

இந்த Sticker Maker app-யில் create a new sticker pack என்ற ஆப்சன் இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 3

தாங்கள் வாட்ஸ்ஆப் ஸ்டிக்கராக நீங்கள் பயன்படுத்தும் போடோவை தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 4

இப்பொழுது தாங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய போடோவில் உள்ள பேக்கிரன்வுடை அழிக்க கத்திரிக்கோல் போன்று ஒரு ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்து புகைப்படத்தின் பின்புறத்தில் உள்ள பேக்கிரவுன்டை கட் செய்தபின் save என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது தாங்கள் உருவாக்கிய ஸ்டிக்கருக்கு sticker pack name என்பதில் ஏதாவது name டைப் செய்து create என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு குறைந்தபட்சம் மூன்று போடோவை ஸ்டிக்கராக ஒரே பெயரில் உருவாக்க வேண்டும். எனவே அடுத்து அடுத்து உருவாக்கும் ஸ்டிக்கரை save செய்யும்பொழுது new sticker pack என்று சேவ் செய்யாமல் Existing sticker pack என்று save செய்ய வேண்டும்.

குறிப்பு:-

வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்கில் குறைந்து மூன்று ஸ்டிக்கர் இருந்தால் தான் அவற்றை வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கராக பயன்படுத்த முடியும்.

இனி எந்த ஒரு App இல்லாமல் Whatsapp Status ட்வுன்லோட் செய்யலாம்..!

ஸ்டேப்: 5

பிறகு தாங்கள் create செய்த ஸ்டிக்கரை select செய்து வாட்ஸ்அப் செயலையில் Add செய்ய வேண்டும்.

பிறகு வாட்ஸ்அப் செயலியில் தாங்கள் உருவாக்கிய ஸ்டிக்கரை யாருக்கு பகிரவேண்டுமோ அல்லது சென்ட் பண்ணவேண்டுமோ அவர்களுக்கு தங்களுடைய ஸ்டிக்கரை send பண்ணுங்க.

குறிப்பு:-

வாட்ஸ்அப் ஸ்டிக்கரை உருவாக்க Google Play Store-யில் இது போன்று பலவகையான டவுன்லோட் ஆப் இருக்கிறது அதனை பயன்படுத்தியும் தங்கள் ஸ்டிக்கர் create பண்ணலாம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement