கரண்ட் பில் ஆன்லைன் பய்மேன்ட் | EB Online Payment in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று தொழில்நுட்பம் பதிவில் ஆன்லைன் மூலம் EB பில் கட்டுவது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த கணினி உலகத்தில் எல்லா பொருட்களையும் போன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி வருகின்றன. போனில் பணம் பரிவதனை செய்கின்றன. இப்போது என்னவென்றால் EB பில் கூட ஆன்லைன் மூலம் கட்டலாம் அந்த அளவிற்கு உலகம் அதிவேகமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. சரி விடுங்க எது எப்படியோ.. இனி கவலை வேண்டாம் வீட்டில் இருந்துகொண்டே மொபைல் மூலம் கரண்டு பில் கட்டலாமாம். சரி வாங்க ஆன்லைனில் எப்படி EB பில் கட்டலாம் என்பதை இப்போது தெளிவாக காண்போம்.
Sbi Atm கார்டு தொலைந்துவிட்டால் எப்படி பிளாக் செய்வது |
Online Eb Bill Payment in Tamil:
ஸ்டேப்: 1
- முதலில் உங்கள் மொபைலில் ஏதாவது ஒரு Browser-ஐ Open செய்து அவற்றில் TNEB என்பதை உள்ளிடவும்.
ஸ்டேப்: 2
- அதில் www.tnebnet.org என்பதை கிளிக் செய்யவும். பிறகு மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் காணப்படும்.
ஸ்டேப்: 3
- பின்பு அதில் QUICK PAY என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 4
- பிறகு மேல்கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் காணப்படும். அதில் முதல் கட்டத்தில் உங்களுடைய கரண்ட் பில் நம்பர் ஆரம்பிக்கும் அதனை உள்ளிடவும்.
- அடுத்தது கீழ் அவர்கள் கொடுத்துள்ள captcha code-ஐ உள்ளிடவும்.
ஸ்டேப்: 5
- பின்பு கீழ் QUICK PAY என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 6
- மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் உங்களுடைய பெயர், முகவரி, கரண்ட் பில் தொகை, கடைசி தேதி கேட்டிருப்பார்கள் அதனை உள்ளிடவும். பிறகு வலது புறத்தில் Pay Biil என்பதில் கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 7
- அடுத்ததாக மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் காணப்படும். அதில் நீங்கள் கட்டவேண்டிய தொகை கொடுக்கப்பட்டிருக்கும்.
ஸ்டேப்: 8
- அடுத்ததாக கீழ் Payment Options என்று இருக்கும். நீங்கள் எந்த முறையில் பணம் கட்டுகிறீர்கள் என்று கேட்டுக்கப்படும். அதில் நீங்கள் செலுத்தும் முறையை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 9
- பிறகு அதை கிளிக் செய்த பின் உங்களுடைய பெயர், வங்கி முகவரி, பில் தொகை, போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதனை உள்ளிடவும்.
ஸ்டேப்: 10
- பின்பு அதற்கென்று விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை படித்த பின் I Have Need the Above Terms & Condition and Agree To Pay என்பதை கிளிக் செய்யவும் பின்பு Confirm Pay என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 11
- மேல் காணப்படும் படத்தில் உள்ளது போல் தெரியப்படும் அதனை உள்ளிடவும். Debit Card விவரம் கொடுக்கவேண்டும்.
ஸ்டேப்: 12
- NEXT கொடுத்த பிறகு அதில் Your Payment is Successful என்று வரும் அது வந்த பின் கொஞ்ச நேரம் காத்திருக்கவும்.
ஸ்டேப்: 13
- கடைசியாக நீங்கள் செலுத்திய தொகை ரசீது வரும் இடது புறத்தில் பிரிண்ட் (print) என்பது கொடுப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்தால் உங்களுடைய போனுக்கு ரசீது வரும்.அவ்ளோதாங்க Process Phone மூலம் இனி Eb பில் கட்டலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |