Incoming Call Settings in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் போன் என்பது அதிகளவு பயன்பாட்டில் இருக்கிறது. ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இல்லை என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன் பயன்பட்டு வருகிறது. நாம் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு Call செய்கின்றோம். அதுபோல அந்த Incoming Call Setting -ல் எவ்வளவு Tricks இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் Incoming Call Setting -ல் இருக்கும் Tricks பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Incoming Call Tricks in Tamil:
Tricks – 1
- முதலில் உங்களுடைய Call செய்யும் ஆப்சன் உள்ளே செல்லுங்கள். அதை மேலே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் இருக்கும்.
- அதை கிளிக் செய்யுங்கள். அதில் Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அதில் Call All Display While Using Apps என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். அதில் 3 ஆப்சன் இருக்கும்.
- அந்த ஆப்சன் எதற்கு என்றால், நமக்கு வரும் Call திரையில் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ தோன்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
- அதில் உங்களுக்கு பிடித்த ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்து கொள்ளலாம்.
Tricks -2
- அதேபோல உங்களுடைய Call செய்யும் ஆப்சன் உள்ளே சென்று அதன் மேல் இருக்கும் 3 புள்ளிகள் போன்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அதில் Caller Id And Spam Protection என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
- அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.
- பின் அதன் கீழே Block Spam And Scam Calls என்ற ஆப்சன் இருக்கும். அதை ON செய்ய வேண்டும்.
- இப்படி செய்வதால் அடிக்கடி வரும் Spam calls ஏதும் உங்களுக்கு வராது .
Tricks -3
- உங்களுடைய Call Settings உள்ளே செல்லுங்கள். பின் அதில் Call Background என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- அதில் Background என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு படத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
- இப்பொழுது யாரவது உங்களுக்கு Call செய்யும் போது இந்த படம் திரையின் பின்னால் தோன்றும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Tamil Tech News |